districts

மாவத்தூரில் சிறப்பு கிராம சபை

கரூர்,நவ.02- கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவத்தூர் ஊராட்சி யில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம்  ஊராட்சி மன்ற தலைவர்  கீதாசெந்தில் மோகன் தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பி.ராமமூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரபாகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் கள், அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள், நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள இணைய வழி வீட்டு வரி, சொத்து வரி செலுத்தும் வசதி குறித்தும், வட கிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  மாவத்தூர் ஊராட்சி செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.