districts

img

மூத்த தோழர் வி.பூசாந்திரம் காலமானார்

 மன்னார்குடி,அக்.16-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம். ஒன்றியக்குழு உறுப்பினரும் விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளருமான தோழர் வி.பூசாந்திரம் காலமானார். அவருக்கு வயது 65. நீண்ட காலம் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்தஅவர்   திங்கட்கிழமை  அதிகாலை 3 மணியளவில் அவரது சொந்த ஊரான காரிச்சாங்குடியில் காலமானார் . 50 ஆண்டுகளுக்கு மேல் கட்சியின் பல்வேறு பொறுப்பு களில் செயல்பட்டவர். அவரது இறுதி நிகழ்ச்சி  திங்கட் கிழமை மாலை 4 மணிக்கு அவரது சொந்த ஊரான காரிச்சாங்குடியில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி சுந்தரமூர்த்தி  தோழர்  பூசாந்திரம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி கந்தசாமி நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர்   டி ஜான் கென்னடி குடவாசல்  ஒன்றிய செயலாளர் கோபிநாத்,  ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை வாலிபர் சங்க ஒன்றிய செய லாளர் ராஜா விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பாண்டியன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.