districts

img

ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை

திருவாரூர், ஏப்.26 - வலங்கைமான் ஒன்றியம் சாரநத்தம் ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர்  கிடைக்காததால், மாதர் சங்கம் தலைமையில்  வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடை பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், சாரநத்தம் வடக்கு காலனி பகுதி யில் உள்ள குடிநீர் தொட்டிக்கு நீர் ஏற்றும்  மோட்டார் கடந்த மாதம் பழுதாகி உள்ளது.  இதனால் கடந்த ஒரு மாதமாக இந்தப்  பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து வலங்கைமான் வட்டார அலுவலகத்தில் பலமுறை புகார்  தெரிவித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து மாதர் சங்கத்தின் வலங்கைமான் ஒன்றியம் தலைமையில், சாரநத்தம் பகுதி மக்கள் ஒன்று திரண்டு, உட னடியாக குடிநீர் வழங்க வேண்டி காலிக் குடத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர்  மற்றும் வலங்கைமான் காவல் ஆய்வாளர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், தற்காலிகமாக சாரநத்தம் தெற்கு பகுதியில் உள்ள குடி நீர் தொட்டியில் இருந்து உடனடியாக குடிநீர்  வழங்குவது, ஒரு வாரத்திற்குள் மேல்நிலை  நீர் தொட்டிக்கு நீர் ஏற்றும் மின் மோட்டாரை  சரிசெய்து, நிரந்தர தீர்வு காண்பதாக உறுதி யளித்தனர். இதையடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.  பேச்சு வார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்  கே.சுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பி னர் எஸ்.இளங்கோவன், வாலிபர் சங்க ஒன்றி யச் செயலாளர் பி.விஜய், கட்சியின் கிளைச்  செயலாளர் எஸ்.ரெகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;