districts

img

மணல்மேடு அரசு கல்லூரிக்கு பேருந்து வசதி செய்து தரப்படுமா? இந்திய மாணவர் சங்கம் சாலை மறியல்

மயிலாடுதுறை, செப்.21 - மயிலாடுதுறை மாவட்டம் மணல் மேடு அரசு கல்லூரியில் பயிலும் மாண வர்கள் வந்து, செல்ல பேருந்து வசதிகள்  இதுவரை முறையாக இல்லை. இந்நிலையில், பல்வேறு போராட்டங் களை இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் நடத்தியும் எந்தவித நடவ டிக்கை எடுக்கவில்லை.  இதனால் மாணவர்கள் செவ்வாய்க் கிழமை கல்லூரி முன்பு சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற போராட்டத்திற்கு கல்லூரி கிளை நிர்வாகி குணசீலன் தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, மாவட்டத் தலைவர் மணிபாரதி, ஒன்றி யச் செயலாளர் மார்டீன், ஒன்றிய தலை வர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். போதிய பேருந்து வசதிகள் இல்லா ததால் கடும் நெரிசலில், படிக்கட்டு களில் பயணம் செய்யும் அவலநிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த  10 தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் ஒருவர் பேருந்திலிருந்து கீழே  விழுந்து படுகாயமடைந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு அதிகாரிகள் வந்து நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித் தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கா மல், அலட்சியப்படுத்துவதாக குற்றம் சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  முன்னதாக சாலை மறியலுக்கு தயா ரான இந்திய மாணவர் சங்க நிர்வாகி கள் மற்றும் மாணவர்களை காவல் துறையினர் அடாவடியாக தடுத்த நிலை யிலும், தடுப்புகளை மீறி போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டக்களத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், மயி லாடுதுறை அரசு போக்குவரத்து பணி மனை மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தி னர். வரும் திங்கள்கிழமைக்குள் கூடுதல் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்த தன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

;