திருத்துறைப் பூண்டி, பிப்.24- திருவாரூர் மாவட்டம் அம் மையப்பன் பகுதி யில் உள்ள ராய் டிரஸ்ட் இன்டர் நேசனல் சார்பாக பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி தொ டங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா வியாழனன்று நடைபெற்றது. இந்த இலவச தையல் பயிற்சி ஏற்பாடுகளை ராய் டிரஸ்ட் இன்டர் நேசனல் நிறுவனர் டாக்டர் துரை ராயப்பன் செய்திருந்தார். மருத்துவ அணி தலைவர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். இலவச பயிற்சியானது, முதற்கட்டமாக 25 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி முடிந்தவு டன் மேலும் 25 மாணவர்களுக்கு பயிற்சி தொடங்கப்படும். ராய் டிரஸ்ட் ஆப்டோமெட்ரிஸ்ட் சிவசங்கர் நன்றி கூறினார்.