தூத்துக்குடி, ஜன.2- தூத்துக்குடி அருகே காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் காத லன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள செவல்குளம் காலனி தெரு வைச் சேர்ந்த தெய்வ பாண்டியன் மகன் வேல்முருகன் (22). ஜேசிபி ஆப்பரேட்டர். வேல்முருகனும் பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அச்சிறுமி யை திருமணம் செய்ய வேல்முருகன் அவ ரது வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் சிறுமியின் பெற்றோர் அதற்கு மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்து வேல்முருகனும் அச்சிறுமியும் விஷம் குடித்துள்ளனர். இதனையடுத்து, இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சிறுமியின் தாய் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வேல்முருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.