திருச்சிராப்பள்ளி, டிச.11 - திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் பெட்ட வாய்த்தலை தேவஸ்தானம் எல்லக்கரை பகுதியில் வண்டிப்பாதை புறம் போக்கு உள்ளது. இப்பா தையை கடந்த 50 ஆண்டு களுக்கு மேலாக ஆர் 800 சொசைட்டி பால் கறவை நிலையத்திற்குச் செல்ல பால் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இவ் வண்டிப்பாதை புறம் போக்கை சிலர் ஆக்கிர மித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டிப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டும். அந்த இடத்தில் சுற்றுச்சுவர், மேற்கூரை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர் சங்கம் சார்பில் திங்களன்று பெட்டவாய்த் தலை பேருந்து நிலையம் அருகில் கறவை மாடுகளு டன் சாலை மறியல் போ ராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் செல்வ ராஜ், கிளைச் செயலாளர்கள் ரெங்கநாதன், கோகுல், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் சீனிவாசன், அஜித்குமார் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கறவை மாடு களுடன் கலந்து கொண்ட னர்.