districts

அரசுப் பேருந்தை மட்டுமே நம்பி ஏழை மாணவர்கள் கல்லூரிக்கு வருகின்றனர் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுகோள்

திருச்சிராப்பள்ளி, செப்.26 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்  தலைமையில் திங்களன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதி செயலா ளர் வேலுச்சாமி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கொடுத்த மனுவில், “திருச்சி மா நகராட்சிக்குட்பட்ட பழைய அபிக்ஷேகபுரம் கோட்டம், புதிய பொன்மலை கோட்டத்தில் உள்ள பிராட்டியூர் கிராமத்தில் பொதுமக்க ளின் பயன்பாட்டில் இருந்து வந்த 110 ஏக்கர்  பரப்பளவு கொண்ட குளம், தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள மழை நீர் வடிகால், பிராட்டியூர் பின்புறம் அரியாறு  வாய்க்கால் ஆகியவற்றில் தற்போது சாக்கடை நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இப்பகுதி களில் கொசுத்தொல்லை மற்றும் டெங்கு காய்ச்சல், யானைக்கால் நோய் பரவும் நிலை  உள்ளது.  எனவே பிராட்டியூரில் 110 ஏக்கர் பரப்ப ளவு கொண்ட குளம், தேசிய நெடுஞ்சாலை யின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால், அரியாறு வாய்க்கால் ஆகியவற்றை அள விட்டு தூர்வாரி சுத்தம் செய்து சுகா தாரத்தை பாதுகாக்க வேண்டும்” என கூறி யுள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்த  போது சிவக்குமார், மாதர் சங்கம் வனஜா ஆகி யோர் உடனிருந்தனர்.  

இதே போன்று இந்திய மாணவர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மோகன்  ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், திருச்சி  மாவட்டம் காஜாமலை பகுதியில் அமைந் திருக்க கூடிய தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு  மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்கள் ஏழை, எளிய நடுத்தர குடும் பத்தைச் சார்ந்த மாணவர்களாக இருப்ப தால், அவர்கள் அரசு பேருந்தை மட்டுமே நம்பி கல்லூரிக்கு வருகின்றனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாண வர்கள் படிக்கக்கூடிய கல்லூரியில், பெரும் பாலும் மாணவர்கள் பேருந்தை மட்டுமே நம்பி கல்லூரிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. ஆனால் போதிய பேருந்து வசதி இல்லாமல் மாணவர்கள் பேருந்து படிக் கட்டுகளில் தொங்கிக் கொண்டு கல்லூரிக்கு  வரும் ஆபத்தான நிலையும் உள்ளது. எனவே  கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என  கூறியுள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமாரிடம் கொடுத்த மனுவில், திருச்சி மாவட்ட முத்தரசநல்லூர் மற்றும் கம்பரசம்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதி களில் 300 ஏக்கர் விவசாய விளைநிலங் களில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட பன்றிகள், 300-க்கும் மேற்பட்ட மாடுகள், 35-க்கும் மேற்பட்ட குதிரைகள் விவசாய விளை நிலங் களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளா கின்றனர். எனவே மாடுகள், குதிரைகள்  மற்றும் பன்றிகளை பிடித்து விவசாயத்தை  பாதுகாக்க வேண்டும் என தெரிவித்திருந் தார்.

;