பறிமுதல் செய்யப்பட்ட ரூ.16 லட்சம் விடுவிப்பு
தஞ்சாவூர், ஏப்.13- தஞ்சாவூர் நாடாளு மன்றத் தொகுதி முழுவ தும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமல்படுத்தப்ப ட்டுள்ளன. 24 மணி நேர மும் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஏப்.12 (வெள்ளியன்று) தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, சட்ட மன்றத் தொகுதிகளில் பறக்கும் படைக் குழு பரிசோ தனையில் ஈடுபட்டிருந்த போது கனரக வாகனத்தை சோதனை செய்ததில், தேர்தல் நடத்தை விதிமீற லின் காரணமாக ரூ.1,04, 950, ரூ.1,00,000, ரூ.67, 080, ரூ.52,100, ரூ.50,340, ரூ.80,000, ரூ.51,230, ரூ.88,500, ரூ.2,20,650, ரூ.60,000, ரூ.1,26,540, ரூ.88,000, ரூ.64,390, ரூ.3,47,390 மற்றும் ரூ.1,00,000 என மொத்தம் ரூ.16 லட்சத்து ஆயிரத்து 170 பறிமுதல் செய்யப்பட்டு சார்நிலை கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவ ணங்கள் மற்றும் விசார ணையின்படி, தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு தொகை உடனடியாக விடுவிக்கப் பட்டது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக் ஜேக்கப் தெரிவித்து உள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு: தஞ்சை ஆட்சியர்
தஞ்சாவூர், ஏப்.13- மக்களவைத் தேர்தலையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்.17 முதல் 19, ஏப்.21, மே 1, ஜூன் 4 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலையொட்டி, ஏப்.17 அன்று காலை 10 மணி முதல் ஏப்.19 (வாக்குப்பதிவு நாள்) அன்று நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4 அன்று, ஏப்.21 (ஞாயிற்று கிழமை) மகாவீர் ஜெயந்தி, மே 1 (புதன்கிழமை) மே தினம் ஆகியவற்றை முன்னிட்டு மேற்கண்ட தினங்கள் முழு வதும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடை கள் மற்றும் பார்கள் FL2 முதல் FL11 வரை (FL6 தவிர) மற்றும் எரிசாராயம் (Spirit) நகர்வு செய்யும் உரிமத் தலங்கள், தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சி யரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள் FL2 முதல் FL11 வரை (FL6 தவிர), மதுபான உரிமத் தலங்கள் மற்றும் எரிசாராயம் (Spirit) நகர்வு செய்யும் உரிமத் தலங்கள் ஆகியவை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார்.
வேட்பாளர் சுதாவை ஆதரித்து இன்று கும்பகோணத்தில் அ.சவுந்தரராசன் பரப்புரை
கும்பகோணம், ஏப்.13- நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் சுதா போட்டியிடுகிறார். கூட்டணி வேட்பாளர் வழக்கறிஞர் சுதாவை ஆதரித்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதிகளில் சிபிஎம் கட்சி யினர், வாலிபர், மாதர், விவசாயிகள், ஓய்வூதிய சங்கத்தி னர் உள்ளிட்டோர் கை சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஏப்.14 (ஞாயிற்றுக்கிழமை) கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் காலை 10 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மத்தியக் குழு உறுப்பின ரும், சிஐடியு மாநிலத் தலைவருமான அ.சவுந்தரராசன், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சுதாவை ஆத ரித்து கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தேர்தல் பரப்புரை செய்கிறார்.
சித்திரைப் பட்டத்திற்கான உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள்
தஞ்சாவூர், ஏப்.13- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரத்தில் ஆங்காங்கே, அவ்வப்போது பெய்துவரும் கோடை மழையைப் பயன்படுத்தி உளுந்து சாகுபடி செய்திட, பேராவூரணி வட்டார விவசாயிகளுக்கு, வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ராணி வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது பெய்துள்ள கோடை மழையைப் பயன்படுத்தி, விவசாயிகள் கோடை உழவினை மேற்கொண்டு, சான்று பெற்ற உளுந்து விதைகளை உடனடியாக விதைக்க வேண்டும். சான்று பெற்ற உளுந்து விதைகள் ஒரு வார காலத்திற்குள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரமான சான்று பெற்ற விதைகளை ஏக்கருக்கு 8 கிலோ வீதம் பயன்படுத்தி, விதை நேர்த்தி செய்து வரிசை நடவு முறையில், வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும், பயிருக்கு பயிர் 10 செ.மீ இடைவெளியும் இருக்குமாறு விதைப்பு செய்திடல் வேண்டும். சான்று பெற்ற உளுந்து விதைகளை விதைப்பதற்கு முன் டிரைக்கோடெர்மா விரிடி என்னும் உயிர்ப் பூசனக் கொல்லியை ஒரு கிலோவிற்கு 4 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்து விதைப்பது அவசியம். இம்மாதிரி விதை நேர்த்தி செய்து விதைக்கும் போது, வேர் வாடல் நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகிறது. விதைப்பதற்கு முதல் நாள் ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் ஒரு பாக்கெட் ரைசோபியம் பயறு மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவை ஆறிய கஞ்சியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும். இப்படி செய்வதால், விதை மூலம் பரவக்கூடிய பூஞ்சை நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. வளர்ச்சிப் பருத்தியில் ஒரு ஏக்கருக்கு திரவ உயிர் உரங்களான ரைசோபியம் பயறு 200 மில்லி மற்றும் பாஸ்போ பாக்டீரியா 200 மில்லி வீதம் பயன்படுத்தி தெளிப்பு செய்திட வேண்டும். பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டிஏபி தெளிப்பு செய்தல் மிகவும் அவசியமாகும். பூக்கும் தருணத்தில் ஒரு தெளிப்பும், 15 நாட்கள் கழித்து ஒரு தெளிப்பும் இலைவழி உரமாக அவசியம் இட வேண்டும். இதனால் பூக்கள் உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு அதிக எண்ணிக்கையில் பொக்கற்ற காய்கள் உருவாகி அதிக மகசூல் கிடைக்கும். மேற்கண்ட தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து அதிக மகசூல் எடுத்து, அதிக லாபம் பெற வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
தஞ்சாவூர், ஏப்.13 - தஞ்சாவூர் நகரம், மானோஜிப்பட்டி தெற்கு, கன்னியம்மாள் நகரில் வசிக்கும், சேட்டை மணி என்ற மணிகண்டன் (29) மற்றும் தஞ்சாவூர் வடக்கு வாசல், மேல லைன் என்ற முகவரியில் வசிக்கும் டக்ளஸ் மணி என்ற மணிகண்டன் (33) ஆகிய இருவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் பரிந்துரையின் பேரிலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் பா.ரமேஷ் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர ஆவணங்களின் அடிப்படையிலும், குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்திட, தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நடுவர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டார். அதன்பேரில், இருவரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மகளைக் கேலி செய்த இளைஞர்: தட்டிக் கேட்ட தந்தை கொலை
தஞ்சாவூர், ஏப்.13 - தஞ்சாவூர் அருகே தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சத்தியமூர்த்தி (50). இவரது மனைவி சசிகலா. இவர்களின் மகன் அபிஷேக் (22) மற்றும் 18 வயதில் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அபிஷேக்கிற்கு பிறந்தநாள் என்பதால் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கு வந்து கொண்டாடினர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த ரூபன் (21) என்ற இளைஞர் மதுபோதையில் வந்திருந்த நிலையில், சத்தியமூர்த்தியின் மகளை கிண்டல் செய்துள்ளார். இதனால் சத்தியமூர்த்தி, ரூபனை திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டார். பிறகு ரூபன் வீட்டிற்கு, தனது மனைவி சசிகலாவுடன் சென்ற சத்தியமூர்த்தி, மீண்டும் ரூபனை கண்டித்து விட்டு வீடு திரும்பினார். இதில் ஆத்திரமடைந்த ரூபன், சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி சசிகலாவை வழிமறித்து தகராறு செய்து, சத்தியமூர்த்தியை கீழே தள்ளியுள்ளார். இதில் தடுமாறி சாலையில் விழுந்த சத்தியமூர்த்தி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சாவூர் தாலுகா காவல்துறையினர், வழக்குப் பதிந்து ரூபனை கைது செய்தனர்.
அமித்ஷா ‘ரோடு ஷோ’விற்காக வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை மதுரையில் வர்த்தகம் பாதிப்பு
மதுரை, ஏப்.13- பாஜக இராம.ஸ்ரீநிவாசனை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம் செய்ய உள்ள நிலை யில் ஏற்கனவே இரண்டு முறை பொ துக்கூட்டம் கடந்த வாரம் ஏற்பாடுகள் செய்யப் பட்டு ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் மத்தி யில் பெருவாரியாக ஆதரவு பொதுக் கூட்டத்திற்கு இல்லாத நிலையில் பொதுக் கூட்டத்தை ‘ரோட் ஷோ’வாக மாற்றி மக்க ளிடம் ஆதரவு திரட்ட முன்வந்துள்ளார்கள் பாஜகவினர். இந்நிலையில், பெரும் வர்த்தகம் நடை பெறும் நேதாஜி ரோடு முதல் நகைக் கடை பஜார் வழியாக விளக்குத்தூண் சென்றடை வது என்று நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டது. பெரும் வர்த்தகம் நடைபெறும் இப்பகுதி யில் ‘ரோட் ஷோ’ நடத்தப்படும் என்ற அறி விப்பு வந்ததிலிருந்து காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் வெள்ளியன்று காலை முதல் இப்பகுதியில் வாகனங்கள் செல்வ தற்கு தடை விதிக்கப்பட்டு கடைகளை பிற்பகல் முதல் மூடுவதற்கு காவல்துறை தெரிவித்திருந்த நிலையில், பெரும்பாலான கடைகள் காலை முதலே மூடியிருந்தன. நகைக்கடை பஜார் பகுதியில் ஏராள மான நகைக் கடைகள் மூடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் வர்த்தகம் என்பது பாதிக்கப்பட்டது. இதேபோல் இப்பகுதியில் உள்ள சிறு சிறு வியாபாரிகளும் கடை களை அடைத்து விட்டதால் பொதுமக்கள் நடமாட்டமின்றியும் வாகன போக்குவரத்து கள் இன்றியும் நேதாஜி ரோடு மற்றும் நகைக் கடை பஜார் போன்ற பகுதிகள் வெறிச் சோடி காணப்பட்டது மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி பகுதிகளில் மட்டும் வாகன போக்கு வரத்து இருந்ததால் பெரும் போக்குவரத்து நெருக்கடி என்பது அப்பகுதிகளில் ஏற்பட்டது. நேதாஜி ரோடு சாலையில் போக்கு வரத்து தடை செய்யப்பட்டு சுமார் பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஓட்டு கேட்க சென்ற இடத்தில் மூதாட்டியிடம் இன்டர்வியூ எடுத்த ராதிகா
விருதுநகர், ஏப்.13- விருதுநகர் அருகே பாலவநத்தம் கிராமத்தில் பொதுமக்களிடம் ஓட்டு கேட்க சென்ற நடிகை ராதிகா, திடீரென மூதாட்டி ஒருவரிடம் இன்டர்வியூ நடத்தினார். சமத்துவ மக்கள் கட்சியை ஒரே நாளில் பாஜகவுடன் இணைத்தார் நடிகர் சரத்குமார். இதையடுத்து மனைவியும் நடிகையுமான ராதிகாவிற்கு பாஜகவிடம் விருதுநகர் தொகுதியை கேட்டும் பெற்றார். இந்நிலையில், விருதுநகர் அருகே பால வநத்தம் கிராமத்தில் நடிகை ராதிகா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது, ராதிகாவை பார்த்த மூதாட்டி ஒருவர், கிழக்குச் சீமையிலே திரைப்படப் பாடலை பாடினார். உடனே மைக் கில் பேசுவதை நிறுத்திய ராதிகா, மைக்கை பாட்டியிடம் நீட்டி இன்டர் வியூவை துவங்கினார். என்னை உங்களுக்கு பிடிக்குமா? அதற்கு அந்தப் பாட்டி உங்க நடிப்பு எனக்குப் பிடிக்கும் என சடாரென பதில் கூறினார்.பின்பு, ராதிகா, நான் உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். நான் நன்றாக செயல் படுவேன் என நம்புகிறீர்களா? என கேட்க, பாட்டியோ, அது உங்க மனச பொருத்தது என்றார். அப்படி ஒரு எண்ணம், என் முகத்தில், அகத்தின் அழகு முகத்தில் தெரியுதா எனக் கேட்டார் ராதிகா, அதற்கு நேரடியாக பதில் கூறாத மூதாட்டி, மீண்டும் கிழக்குச் சீமை யிலே பாடலை பாடத் தொடங்கினார். இருப்பினும் சமாளிக்கத் தொடங்கிய ராதிகா, அப்படின்னா உங்களுக்கு நம்பிக்கை இருக்கு..ல.. என மீண்டும் கேட்க, மூதாட்டியோ, எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.. ஆனால், ஆட்சிக்கு வர்றவுங்களுக்கு இருக்க வேணும்ல என அதிரடியாக பதில் கூறவே, இதை சற்றும் எதிர் பார்க்காத ராதிகா சிரித்து மழுப்பத் துவங்கினார்.
கோடை விடுமுறை நெரிசலைத் தவிர்க்க சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்கம்
பயணிகள் மகிழ்ச்சி
பயணிகள் மகிழ்ச்சி தஞ்சாவூர், ஏப்.13- கோடை விடுமுறை கால பயணிகள் நெரிசலைத் தவிர்க்க, திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு விரைவு ரயிலை காரைக் குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் ரயில் தடத்தில் இயக்குகிறது. திருநெல்வேலி - சென்னை எழும்பூர் - திருநெல்வேலி கோடைகால சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண்.06070) ஏப்ரல் 11, 18, 25, மே 29, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (வியாழக் கிழமைகள்) மாலை 06.45 மணிக்கு திரு நெல்வேலியிலிருந்து புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக் குடி, அறந்தாங்கி, பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டைக்கு வியாழன் இரவு 11:53 மணிக்கு வருகிறது. தொடர்ந்து அதிராம்பட்டினம், முத்துப் பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக வெள்ளிக்கிழமை காலை 8:30 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். மீண்டும் இந்த ரயில் (வண்டி எண். 06069) சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10 ,17, 24, 31 தேதிகளில் (வெள்ளிக்கிழமைகள்) பகல் 03.00 மணிக்கு புறப்பட்டு இதே மார்க்கத்தில் பட்டுக்கோட் டைக்கு இரவு 11:13 மணிக்கு வந்தடைந்து தொ டர்ந்து திருநெல்வேலிக்கு சனிக்கிழமை காலை 07.10 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயிலில் இரண்டடுக்கு ஏசி ரயில் பெட்டி 1, மூன்றடுக்கு ஏசி 6, படுக்கை வசதி 9, முன்பதிவில்லா பொது பெட்டிகள், 4 மாற்றுத் திறனாளிகளுக்கானது 1 லக்கேஜ் பிரேக் வேன் 1 என மொத்தம் 22 பெட்டிகள் இருக்கும். இந்த ரயில் கோடை விடுமுறையில் சென்னை மற்றும் திருநெல்வேலியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் பெற்றோர் கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ரயில் பயணிகள், வர்த்த கர்கள், அரசு அலுவலர்கள் மகிழ்ச்சி தெரி வித்தனர். ரயில் பயணிகள் வர்த்தகர்கள் கோரிக் கையை ஏற்று இந்த கோடை கால சிறப்பு விரைவு ரயிலை இயக்கிய தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு ரயில் பயணிகள், வர்த்த கர்கள், பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் நன்றி தெரி வித்தனர். தொடர்ந்து இந்த ரயிலை இயக்க வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே நிர்வா கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.