districts

பொருட்கள் ஏற்றுமதி குறித்து தஞ்சை தொழில் மையத்தில் தகவல் அறியலாம் ஆட்சியர்

தஞ்சாவூர், ஆக.6-

       தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

     மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையமானது மாவட்ட  தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகத்தில் தொழில் வணிகத் துறையின் FaMeTN அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.

     தஞ்சாவூர் மாவட்டத்தில் ‘ஒரு மாவட்டம், ஒரு தயா ரிப்பு’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ்  கைவினைப்  பொருட்கள், தென்னை சார்ந்த பொருட்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களும் தேர்வு  செய்யப்பட்டுள்ளன.

     தஞ்சாவூர் பொம்மைகள், தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சா வூர் ஓவியங்கள், சுவாமிமலை சிலைகள், நாச்சியார்கோ வில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் வீணை, நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், கருப்பூர் கலம்காரி ஓவியம் மற்றும் திருபு வனம் பட்டு சேலைகள் போன்ற கைவினைப் பொருட்களை  உற்பத்தி மற்றும் விற்பனை செய்யத் தேவையான மானி யத்துடன் கூடிய கடன்களை, வங்கிகள் மூலமாக மாவட்ட  தொழில் மைய அலுவலகமானது வழங்கி வருகிறது.

     மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகத்தில் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், பாரத பிரத மரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப் படுத்தும் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில்  வணிக முன்னோடி திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகின்றன.  

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூல தன மானியமாக திட்ட முதலீட்டில் 25 சதவீதம் அல்லது ரூ.1.50 கோடி வரை வழங்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையம்,  தஞ்சாவூர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையத்தில், ஏற்றுமதி தொடர்பான பல்வேறு  தகவல்கள், வழிமுறைகள் மற்றும் பொதுவான விழிப்பு ணர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

     தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பொருட்களை ஏற்றுமதி  செய்ய விரும்பும் நபர்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்  மற்றும் ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் மாவட்ட ஏற்றுமதி ஊக்கு விப்பு மையத்தை தொலைபேசி எண் (04362-255318) வாயி லாகவோ அல்லது நேரிலோ அணுகி பயன்பெறலாம்.

   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.