தஞ்சாவூர், ஜூலை 13-
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில், சுதந்திர இந்தியாவின் முதல் ரயில்வே இணை அமைச்சர் அமரர் கும் மட்டி திடல் க.சந்தானத்தின் 129-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சேவை அமைப்பு களைச் சேர்ந்தவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரயில் குறித்த விழிப்பு ணர்வுக் கருத்தரங்கம் பட்டுக்கோட்டை மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது.
கருத்தரங்கிற்கு, தலைமை ஆசிரியர் சி தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஆர்.ருத்ரா பதி, பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணி கள் நலச் சங்க தலைவர் என் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கச் செயலாளர் வ.விவேகானந்தம் வரவேற்றார். சங்கத் தணிக்கையாளர் ஆ. ராமமூர்த்தி, க.சந்தானம் நாட்டுக்கு ஆற்றிய நற்பணிகளை எடுத்துரைத்தார். திருச்சி ராப்பள்ளி ரயில்வே முதுநிலைக் கோட்ட இயக்கவியல் மேலாளர் எம்.ஹரிகுமார் ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட, பள்ளித் தலைமை ஆசிரியர் சி.தெட்சிணாமூர்த்தி பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், ரயில்வே போக்கு வரத்து ஆய்வாளர் பெத்துராஜ், பட்டுக் கோட்டை ரயில் நிலைய அதிகாரி மருது பாண்டியன் ஆகியோர் பேசினர்.
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, புனித இசபெல் மக ளிர் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், தேசிய பசுமைப் படை, இளை யோர் செஞ்சிலுவை சங்கம், பாரத சார ணர், சாரணீய இயக்கத்தை சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் கருத்தரங்கில் பங் கேற்றனர்.