districts

புதுக்கோட்டை மாவட்டத்தில் 123 வாக்குச்சாவடி மையங்கள் மாற்றம்

புதுக்கோட்டை, ஆக.26 -

        புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக 123 வாக்குச்சாவடி மையங்கள் மாற்றம் செய்யப்பட உள்ளன.  அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்டு மாவட்ட தேர்தல் அலுவ லரும், மாவட்ட ஆட்சியருமான ஐ.சா.மெர்சி ரம்யா பேசியதாவது:

     கடந்த 5.1.2023 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,62,655 ஆண் வாக் காளர்கள், 6,79,306 பெண் வாக்காளர்கள் மற்றும் 66 மூன்றாம்  பாலினத்தவர்களை சேர்த்து மொத்தம் 13,42,027 வாக்கா ளர்கள் இடம் பெற்றுள்ளனர்.  

     புதுக்கோட்டை மாவட்டத்தில் 1559 வாக்குச்சாவடி மையங்கள்  உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 941 வாக்குச்சாவடி அமை விடங்கள் உள்ளன. இதில் நகர எல்லைக்குள் 85 வாக்குச் சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்லைக்குள் 856 வாக்குச் சாவடி அமைவிடங்கள் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில்  1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்கள்  ஏதுமில்லை. 2 கிலோ மீட்டருக்கு அப்பால் வாக்குச்சாவடி மையங் கள் ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறு சீரமைப்பு தொடர்பாக கட்டிடம் மாற்றம் 77, இடம் மாற்றம் 5  என மொத்தம் 82, வாக்குச்சாவடி பிரிவு மாற்றம் 2,  வாக்குச் சாவடி பெயர் மாற்றம் 39 என மொத்தம் 123 மாற்றங்கள் செய்யப் பட உள்ளன.

    இக்கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்றன.