திருவாரூர், ஜூன் 13-
திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் கட்டுரைகள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் அ.புகழேந்தி வெளி யிட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் யு.எஸ்.பொன்முடி, பி.சங்கர லிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சு.ராஜேந்திரன், வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க. இரவிச்சந்திரன், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் அ. முரளி மற்றும் வானவில் மன்ற கருத்தா ளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.