districts

img

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதை கைவிடுக! அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 28 - புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.  ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணை யத்தை கலைத்து, தேசிய ஓய்வூதியத்தின் கீழ் உள்ள அனைத்து சந்தாதாரர்களையும் வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய முறையின் கீழ் கொண்டு வர  வேண்டும். அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஒப்ப டைப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட  கொரோனோ தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட சலுகை களை உடனே வழங்க வேண்டும்.  சத்துணவு, அங்கன்வாடி எம்.ஆர்.பி செவிலி யர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூல கர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த, வெளிமுகமை மற்றும் தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஒன்றிய-மாநில அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசுத் துறை களில் ஒப்பந்தம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறை களை தடுத்திட வேண்டும். ராணுவ தளவாட தொழிற்சாலை, ரயில்வே, ஆயுள் காப்பீட்டு, வங்கி, தொலைத்தொடர்பு, துறைமுகம், எரிவாயு நிறுவனங்கள், விமானம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதை கைவிட வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும். அனைத்து தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்ப பெற  வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கைவிட  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பெரியசாமி, மாவட்ட செய லாளர் பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் பேசினர்.

;