districts

img

பணியின்போது இரு சக்கர வாகனம் மோதி பலி அரசு ஊழியர் சங்க முன்னணி ஊழியர் முத்தையா உடலுக்கு அரசு ஊழியர் சங்கம் - சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

தேனி, பிப்.19- தேனியில் பணியிலிருந்த நெடுஞ்சாலைப் பணியாளரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்  னணி ஊழியருமான தோழர் முத்தையா  இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். அன்னாரது உட லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு ஊழியர் சங்க தலைவர்கள் இறுதிமரியாதை   செலுத்தினர். தேனி கோட்ட மாநில நெடுஞ்  சாலைத் துறையில் சாலை பணி யாளராக பணியாற்றி வந்தவர் முத்தையா. இவர், அரசு ஊழி யர் சங்க மாவட்ட துணைத் தலை வராகவும், சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். தேனி கர்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலை யம்,  பெரியகுளம் புற வழிச் சாலை யில், அன்னஞ்சி விலக்கு அருகே சாலையோர புல்புதர்களை அப்பு றப்படுத்தும் பணியில் முத்தையா ஈடுபட்டிருந்தார். அப்போது தேனி,  முல்லைநகரைச் சேர்ந்த சமயணன்  மகன் ஜெகநாதன் என்பவர் ஓட்டிச்  சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்  பாட்டை இழந்து  முத்தையா மீது  மோதியது. இதில் படுகாயம டைந்த முத்தையா, தேனி அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் ஞாயிறன்று அதிகாலையில் அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல் கூராய்விற்கு பின் அன்  னாரது உடல் தேனி கொண்டு வரப்பட்டு தேனி மின் மயானத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக் கப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.செல்வம், மாநில துணைத்தலைவர் மொ. ஞானத்தம்பி, மாவட்டச் செயலா ளர்கள் விருதுநகர் கருப்பையா, தேனி தாஜுதீன்,  மதுரை நீதிராஜா,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.வெங்கடேசன், எம்.ராமச்சந்திரன், டி.கண்ணன், எஸ்.வெண்மணி, சி.முனீஸ்வரன், விவ சாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் கே.ராஜப்பன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச்செய லாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, நெடுஞ்சாலைத்துறை தேனி உதவி கோட்டப்பொறியாளர் ராம மூர்த்தி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் சீனி வாசன், செயலாளர் செல்லத்துரை, ஓய்வூதியர்கள் சங்க தலைவர்கள் கே.துரைராஜ், சி.மு.இப்ராகிம், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் ப.மோகன் குமாரமங்கலம், சிஐ டியு மாவட்டத் தலைவர் டி.ஜெயப்  பாண்டி, பொருளாளர் ஜி.சண்மு கம்,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்ட நிர்வாகிகள் அழகுராஜ், முத்துக்குமார், தமிழ்பரமன், ராம கிருஷ்ணன், ரவிக்குமார் உள் ளிட்டோர் இறுதி மரியாதை செய்த னர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பெ.பேயத்தேவன் தலை மையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பல்வேறு அமைப்பு களின் தலைவர்கள் பேசினர்.