அரியலூர், ஜூன் 23 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தின் ஏழு முனைகளில் இருந்து நடைபெறும் பிரச்சார பயண வாகனம் புதுக்கோட்டையில் துவங்கியது. இந்த வாகனம் புதனன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பிரச்சார இயக்கம் நடத்தி யது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் வேல்முருகன் தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மலர்விழி, அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் அம்சராஜ் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். சத்துணவு ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலி யர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலமான 41 மாத காலத்தை பணிக்கால மாக அறிவித்திட வேண்டும். அரசு அலுவலகங் களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பி, ஊழியர்களின் பணிச் சுமையை குறைத்திட வேண்டும். சரண்டர் டிஏ-வை உடனே வழங்கிட வேண்டும். ஊதியக் குழுவில் விடுபட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட னர். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜவேம்பு, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வி, அனுசுயா, ரேடியோ கிராஃபர் சங்க மாநில அமைப்பு செயலாளர் இளங்கீரன், எம்ஆர்பி செவிலியர் சங்க மாவட்ட தலைவர் செல்வி, மாவட்டச் செயலா ளர் ராகவன், கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் மதியழகன் மற்றும் ஜெயங்கொண் டம், ஆண்டிமடம் வட்டத்தைச் சேர்ந்த அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.