districts

img

தாண்டவன்குளம் கிராமத்தில் தீண்டாமைச் சுவர் எழுப்ப திட்டம் தடுத்து நிறுத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

மயிலாடுதுறை, அக்.8 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மயிலாடுதுறை மாவட்ட  சிறப்பு மாநாடு சனிக்கிழமை கிங் பேலஸ் பி.எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் நினைவரங்கில் அமைப்பின் மாவட்ட தலைவர் எஸ்.இளங்கோவன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் வ.பழனி வேலு வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் டி.கண்ணகி அஞ்சலி தீர்மா னத்தை முன்மொழிந்தார். முன்னதாக டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் உருவ சிலைகளுக்கு மாலை அணி வித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மாநாட்டை வாழ்த்தி மாநிலச் செயலாளர் பழ.வாஞ்சிநாதன் உரை யாற்றினார். சிபிஎம் மாவட்ட செயலா ளர் பி.சீனிவாசன், தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ் கலந்து கொண்டனர். அமைப்பு நிலை அறிக்கையை மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், நிதி  நிலை அறிக்கையை ஏ.ஆர்.விஜய் ஆகி யோர் வாசித்தனர். மாநாட்டில் கொள்ளிடம் ஒன்றியம்,  அண்ணா நகர் அருகில் புதிதாக சுமார்  25 ஏக்கர் நிலத்தில் சாந்தி நகர்  என்ற ஒரு குடியிருப்பு பகுதி உருவாக் கப்படுகிறது. இந்த புதிய நகரை ஒட்டியுள்ள அண்ணா நகரை, மறைத்து 8 அடி உயரத்திற்கு தீண்டாமை சுவர் எழுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான கட்டுமானப் பொருட்கள் வந்து இறங்கியுள்ளன. இந்த தீண்டாமை சுவர் எழுப்பப்படுவதை தடுத்து நிறுத்த  வேண்டும். கொள்ளிடம் ஒன்றியம் மாதானம் கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது அரசுக்கு சொந்தமான இடத்தில் பட்டியல் வகுப்பு மக்கள்  கடை போடக் கூடாது என சாதி  வெறியர்கள் கூறியதை ஏற்றுக்கொள்ள  மறுத்த அம்மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியும், கடை களை இடித்தும் சாதி வெறியர்கள் கல வரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாதி வெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் சந்திராவையும் சாதி வெறி யர்களையும் கண்டித்தும் அரசுக்கு சொந்தமான இடத்தில் பட்டியல் வகுப்பு  மக்களுக்கு உள்ள உரிமையை நிலை நாட்ட வேண்டும். சாதி ஆணவ படுகொ லைகளை தடுத்திட தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அமைப்பின் புதிய மாவட்டத் தலை வராக சி.மேகநாதன், செயலாளராக ஏ.எஸ்.இளங்கோவன், பொருளாள ராக ஏ.ஆர்.விஜய், துணைத் தலைவர் களாக ஜி.ஸ்டாலின், வ.பழனிவேலு, துணைச் செயலாளர்களாக ஏ.டி.நேதாஜி, அ.அறிவழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வா கிகள் உள்ளிட்ட 23 பேர் கொண்ட  மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.  புதிய நிர்வாகிகளை அறிவித்து மாநில துணைத்தலைவர் க.சாமிநாதன் நிறை வுரையாற்றினார்.

;