நாகப்பட்டினம், அக்.9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய 24 ஆவது மாநாடு, திருமருகல் ஊராட்சியில் நடைபெற்றது. சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எம்.அபுபக்கர் வாழ்த்துரை வழங்கினார். மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி நிறைவுரை யாற்றினார். புதிய ஒன்றியக் குழு உறுப் பினர்கள் 11 பேர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். திருமருகல் ஒன்றியக் குழுவின் புதிய செயலாளராக பி.எம்.லெனின் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக நடைபெற்ற கிளை மாநாடுகளில் ஏர்வாடி எஸ்.ரவி, இடயாத்தன்குடி எம்.சுப்ரமணியன், போலகம் ஏ. மகேந்திரன், திருப்புகலுர் ஜெ. கோபி, திருக்கண்ணபுரம் கே. சுப்ரமணியன், கோட்டூர் எம்.ஜெகன், ஏனங்குடி எஸ்.தியாக ராஜன், வடகரை ஆர்.ராஜ மாணிக்கம், ராறாந்தி மங்கலம் ஏ.ரஷ்யா, திருமரு கல் ஏ. பக்கிரிசாமி, கீழதஞ்சா வூர் ஆர். தினேஷ்மோகன், கட்டுமாவடி எஸ்.செல்வ குமார், இரவாஞ்சேரி பி. சதீஷ், குத்தாலம் எஸ்.மாரியப்பன் ஆகியோர் கிளைச் செயலா ளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். வேதாரணியம் தெற்கு ஒன்றிய மாநாடு வேதாரண்யம் தெற்கு ஒன்றிய மாநாடு ஆயக்காரன் புலம் இரண்டாம் சேத்தி ஊராட்சியில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலா ளர் வி.மாரிமுத்து மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு நிறைவு ரையாற்றினார். வேதாரண்யம் தெற்கு ஒன்றிய புதிய செயலாளராக வி.அம்பிகாபதி தேர்ந்தெ டுக்கப்பட்டார். 11 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு தேர்ந்தெ டுக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற கிளை மாநாடுகளில் அண் ணாப்பேட்டை எஸ்.செந்தில் குமார், துளசியாப்பட்டினம் டி.சேகர், வாய்மேடு கே.குழந் தைவேலு, தாணிக்கோட்டகம் பி. பன்னீர்செல்வம், தகட்டூர் ஏ.ஆனந்தன், பஞ்சநதிக் குளம் நடுசேத்தி வி. ஆனந்த், பஞ்சநதிக்குளம் கிழக்கு ஏ கிளை, ஏ.ராமன், பி கிளை பி.குஞ்சிநாதன், ஆயக்காரன் புலம் மூன்றாம் சேத்தி ஏ கிளை வி.எம்.சோழராஜன், பி கிளை எஸ். செல்லத்துரை, ஆயக்கா ரன்புலம் ஒன்றாம் சேத்தி எம்.உத்திராபதி, பி கிளை சி. அரிகிருஷ்ணன், ஆயக்கா ரன்புலம் நான்காம் சேத்தி வி. பாலசந்தர், பி கிளை எம்.ரமேஷ், சக்கரம்பேட்டை டி. முகில்வண்ணன், வேதாரண் யம் நகரக்கிளை. ஏ. மரிய செல்வராஜ், ஆதனூர் வி. கணேசமூர்த்தி, பஞ்சநதிக் குளம் மேற்கு எஸ்.முருகை யன் ஆகியோர் கிளைச் செய லாளர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.