districts

img

மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் திருலோக்கி ஊராட்சியில் செவ்வாயன்று மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவியாக மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.