பட்டுக்கோட்டையில் ஓய்வூதியர் கூட்டம்
தஞ்சாவூர், செப்.13 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மெரினா கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூ தியர் சங்க, பட்டுக்கோட்டை வட்டக்கிளையின் கூட்டம் நடைபெற்றது. வட்டத்தலைவர் கண.கல்யாணம் தலைமை வகித்தார். மாவட்டத் தணிக்கையாளர் பொ.சமுதாக்கனி வரவேற்றார். வட்ட துணைத்தலைவர் க.கிருஷ்ண மூர்த்தி தீர்மானங்களை முன் மொழிந்தார். துணைத் தலைவர் த.சந்திரமோகன் வேலை அறிக்கையையும், பொருளாளர் சோம.ஆறுமுகம் நிதிநிலை அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் மாநிலச் செயலாளரும், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க திருச்சிராப்பள்ளி மாநகர் கிளை தலைவர்களில் ஒருவருமாக பி.வி.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் அ.சண்முகம் நன்றி கூறினார். வட்டத் தணிக்கையாளர் இளஞ்சேரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
விளையாட்டு போட்டிகளுக்கு தேர்வான மாணவர்களுக்குப் பாராட்டு
தஞ்சாவூர், செப்.13- தஞ்சாவூரில் கடந்த மாதம் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடை பெற்றது. மாவட்டத்தின் அனைத்துப் பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில், செங்கமங்கலம் அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தேவகாஞ்சனா சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தகுதி பெற்றார். இப்பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவர் கிருத்திஸ்வரர் தடகளப் போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவி லான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றார். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாநிலப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் கிருத்தீஸ்வரர், மாணவி தேவகாஞ்சனா ஆகியோரை யும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் வி.ஏ. டி. சாமியப்பன், பள்ளி முதல்வர் கணேசன், மூவேந்தர் அறக்கட்டளை உறுப்பி னர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், ஆசிரி யர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
இலவச சைக்கிள்கள் வழங்கல்
பாபநாசம், செப்.13- தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவா ஹிருல்லா மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலை வர் கே.வீ.கலைச்செல்வன், மெலட்டூர் பேரூராட்சித் தலை வர் இலக்கியா, மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் ஹிபாயத்துல்லா, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக் குழுவினர் கலந்துகொண்டனர்.
கண் சிகிச்சை முகாம்
பாபநாசம், செப்.13- எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், தஞ்சாவூர் வாசன் ஐ கேர் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை பாபநாசம் அருகே ரெகுநாதபுரத்தில் நடத்தின. கண் பரிசோதகர்கள் கேசவன், அஜந்தா ஆகியோர் கண் பரிசோதனைகளை மேற் கொண்டனர். இதில் பேங்க் ஊழி யர்கள், வாசன் ஐ கேர் மக்கள் தொடர்பு அலுவலர் ராஜ் குமார், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர் உட்பட பங்கேற்றனர்.
ஆசிரியர்களுக்குப் பாராட்டு
பாபநாசம், செப்.13- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பட்டுக்கோட்டை அழ கிரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமைச் செயலர் கலிய மூர்த்தி தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் செல்வராசு வரவேற்றார். நிதிச் செயலர் பொம்மி, வரதராஜன், திரு ஞானசம்பந்தம், பூவானந்தம், ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி அறங்காவலர் இளவரசி ஆசிரியர்களுக்கு பரிசளித்துப் பாராட்டினார். பள்ளித் தலைமையாசிரியர் தீபக், உதவித் தலைமையாசிரியர் சித்ரா ஆகியோர் ஏற்புரையாற்றினர். நிர்வாகச் செய லர் கைலாசம் நன்றி கூறினார்.
அய்யம்பேட்டையில் கண் சிகிச்சை முகாம்
பாபநாசம், செப்.13- தஞ்சாவூர் மாவட்ட பார்வையிழப்புத் தடுப்புச் சங்கம், கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அய்யம்பேட்டை லயன்ஸ் கிளப் இணைந்து அய்யம்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின. கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ் முகாமில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனை செய்தார். கண்ணில் புரை இருப்பது கண்டறியப்பட்டவர்கள், அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக், அய்யம் பேட்டை லயன்ஸ் கிளப் தலைவர் கேசவன், செயலர் விஜய ராஜன், பொருளாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். திருக்குறள் மையக்கூட்டம்
திருக்குறள் மையக்கூட்டம்
பாபநாசம், செப்.13- தஞ்சாவூர் பாபநாசம் உலகத் திருக்குறள் மைய மாதந்திரக் கூட்டம் பாபநாசம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டட வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மையச் செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரகுபதி முன்னிலை வகித்தார். சங்கர் வரவேற்றார். சிறுகுடி வண்டல் இலக்கிய அமைப்புத் தலைவர் செந்தில்குமார் “திருக்குறளில் சமூக நீதி” என்ற தலைப்பில் பேசினார். திருக்குறள் தொண்டு அறக்கட் டளை, வலங்கைமான் அறம் அறக்கட்டளைச் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப் பட்டது. தில்லை நாயகி உட்பட பலர் கலந்து கொண்டனர். குருசாமி நன்றி கூறினார்.
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி; மூன்று பேர் காயம்
நாகப்பட்டினம், செப்.13- நாகப்பட்டினம் மாவட்டம், வேதா ரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் உள்ள ஆஞ்சநேயா பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர் ஆஞ்சநேயா பட்டாசு ஆலை உரிமையாளரான கஜேந்திரனின் தந்தை எஸ்.மணி (65) என அடையாளம் காணப்பட்டார். செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி யளவில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் வேலை செய்து கொண்டிருந் துள்ளனர். பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு கான்கிரீட் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில், அயன்காரன்புலத்தைச் சேர்ந்த எம்.மேரிசித்ரா (35), வி.கலா (35), தூத்துக் குடியை சேர்ந்தகண்ணன் ஜி.கண்ணன் (34), ஆகியோர் காயமடைந்தனர். மணியின் உடல் உடற்கூராய்விற்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்தவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம், திருவிடைமருதூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்
கும்பகோணம், செப்.13 கும்பகோணம், திருவிடைமருதூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 264 வழக்கு களுக்குத் தீர்வு காணப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய இடங்க ளில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. கும்பகோணம் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகள் நடை பெற்றது. முதல் அமர்வில் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவசக்தி வேல், கண்ணன் தலைமையில் வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள் மோகன் ராஜ், சசிகலா ஆகியோர் கலந்து கொண்டனர். இரண்டாவது அமர்வில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி புவியரசு தலைமையில் வட்ட சட்ட பணிகள் குழு வக் கீல்கள் செந்தில்குமார், மங்களம் ஆகி யோர் கலந்து கொண்டனர். திருவிடைமருதூர் திருவிடைமருதூர் மாவட்ட உரிமை யியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் நடைபெற்ற அமர்வில் மாவட்டக் குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவர் சிவப்பழனி, வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள் மாதவன், பூமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 948 வழக்குகள் விசார ணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுஉடனடி தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.2 கோடியே 70 ஆயிரத்து 141 ரூபாய் பணம் சம்பந்தமான வழக்குகள் தீர்வு காணப்பட் டது. இதற்கான ஏற்பாடுகளை கும்ப கோணம் வட்ட சட்ட பணிகள் குழுவின் இள நிலை உதவியாளர் ராஜேஷ்குமார், தன் னார்வ சட்டபணியாளர்கள் ராஜேந்திரன், பாஸ்கரன் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
ஊரகவளர்ச்சித்துறை ஊழியர்கள்
பணிகளைப் புறக்கணித்துப் போராட்டம்
திருவாரூர், செப்.13- ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையிலான பணியி டங்களையும் நிரப்ப வேண்டும், தேர்வு நிலை- சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழி யர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரி மைகளையும் ஊராட்சிச் செயலர்களுக்கு வழங்க வேண்டும், எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் கணினி உதவியாளர்கள் அனைவரையும் பணிவரன் செய்து முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் திருவாரூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பணியைப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் மாவட்டத் தலைவர் என்.வசந்தன், மாவட்டச் செயலாளர் கே.செந்தில் ஆகி யோர் தலைமையில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. குடவாசல், கொரடாச்சேரி, நீடாமங்க லம், வலங்கைமான், நன்னிலம், திருத் துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பத்து ஒன்றியங்களிலும் மாவட்ட,வட்ட நிர் வாகிகள் தலைமையில் பணிப் புறக்க ணிப்புப் போராட்டம் நடைபெற்றது.
விளையாட்டு போட்டியின் போது இறந்த மாணவரின் குடும்பத்திற்கு உதவி
மயிலாடுதுறை, செப்.13- மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் உள்ள கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் ரிஷிபாலன். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி தரங்கம்பாடி அருகேயுள்ள காட்டுச்சேரி அரசு மாவட்ட சிறு,குறு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று ஓடிக்கொண்டிருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்தார். இதையறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டா லின், மாணவர் ரிஷிபாலனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலை யும் தெரிவித்ததோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கினார். இந்நிலையில் அந்த மாணவர் பயின்ற செம்பனார் கோவிலில் உள்ள கலைமகள் கல்வி நிறுவனத்தில் (கலை மகள் கல்லூரி) இறந்த மாணவரின் படத்திறப்பு நிகழ்ச்சி மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிர்வாக இயக்குநர் குடியரசு தலைமை வகித்தார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு மாணவரின் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கலைமகள் கல்வி நிறுவனத்தின் சார்பில் ரூ.10 லட்சம் மாணவரின் குடும்பத் திற்கு வழங்கப்பட்டது.
வேளாண் விரிவாக்க மையங்களில் ஆய்வு
பாபநாசம், செப்.13- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டாரத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், விதை கிராமத் திட்டம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் இடுபொருட்கள் விநியோகம், விதை நெல் இருப்பு ஆகியவை குறித்து, மேலதிருப்பந்துருத்தி, மன்னார் சமுத்திரம் வேளாண் விரிவாக்க மையங்களில் வேளா ண்மை துணை இயக்குநர் சுஜாதா ஆய்வு மேற்கொண்டார். கிடங்குகளில் இருப்பு உள்ள, நீண்ட கால நெல் ரகங் களை உடன் விநியோகித்து முடிக்க வேண்டும். சம்பா பரு வத்தில் உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் அமைக் கப்பட உள்ள செயல் விளக்கங்களுக்கான இடுபொருட் களை உரிய காலத்தில் விநியோகித்து, செயல்விளக் கங்கள் அமைக்க வேண்டும் என தெரிவித்தார். பெறப்படும் விதைகளுக்கு உடனுக்குடன் முளைப்புத் திறன் சோதனை கிடங்குகளில் நடத்த வேண்டும். பிஎம் கிஸான் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை உடனுக்குடன் பரிசீலித்து தீர்வு செய்ய வேண்டும். தீர்வு செய்ய இயலாத மனுக்களை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்கு உரிய பரிந்து ரையுடன் அனுப்ப வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை கிடங்கு மேலாளர்கள் அறி வுக்கரசன், நாகலட்சுமி, உதவி வேளாண் அலுவலர்கள் அகிலா, உமா பிரியா, இளந்திரையன் ஆகியோர் செய்தி ருந்தனர்.
பூட்டிய வீடு தீ பற்றியதில் மாற்றுத்திறனாளி பலி
நாகப்பட்டினம், செப்.13- நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரத்தில் 45 வயதுடைய மாற்றுத்திறனாளி ஒருவரின் வீடு செவ்வாய்க்கிழமை தீப்பிடித்ததில் தீக்காயங்களுடன் வீட்டுக்குள் இறந்து கிடந்தார். காவல்துறையினரின் தகவல்படி, என்.ராஜேஷ் என்ற மாற்றுத்திற னாளி காமேஸ்வரம் கிராமத்தில் ஒரு குடிசையில் தனியாக வசித்து வந்தார். அவரது குடும்பத்தினர் அருகில் தனித்தனியாக வசித்து வந்த னர். செவ்வாய்கிழமை மாலை இவரது வீடு தீப்பிடித்து எரிந்ததில் ராஜேஷ் உள்ளே சிக்கிக் கொண்டார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீ அணைக்கப்பட்ட நிலையில் ராஜேஷ் வீட்டுக்குள் இறந்து கிடந்தார்” என்றனர். ஆனால், “ராஜேஷை,உள்ளே வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு தீ வைத்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்”.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வளர்ச்சிப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம் ஆய்வு
தஞ்சாவூர், செப்.13 - தஞ்சாவூர் ரயில் நிலை யத்தில் மாவட்ட நிர்வாகம், ரயில்வேத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை யுடன் இணைந்து ரயில் நிலையங்களில் மேற் கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து தஞ்சாவூர் நாடாளு மன்ற உறுப்பினர் ச.சு.பழநி மாணிக்கம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ்.அன்பழகன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இந்தக் கூட்டத்தில் தஞ்சாவூர் மற்றும் கும்ப கோணம் ரயில் நிலை யங்களின் வளர்ச்சி மேம் பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புதுப்பிக் கப்பட்ட வேலைகள் குறித் தும், ரயில் நிலையம் அரு கில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்தும், கும்ப கோணம் ரயில்வே பிளாட் பாரம் விரிவாக்கப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப் பட்டது. தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஜி.செந்தில்குமாரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் இலக் கியா (தஞ்சாவூர்), பூர்ணிமா (கும்பகோணம்), ரயில்வே முதுநிலை வணிக மேலா ளர் செந்தில்குமார், ரயில்வே கோட்டப் பொறியாளர் (கிழக்கு) ரவிக்குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
வனத்துறை-தமிழ் பல்கலைக்கழகம் ஒப்பந்தம்
தஞ்சாவூர், செப்.13 - மண்ணின் மரபோடு தொடர்புடைய, சங்க இலக்கியங்களில் காணப்படும் மரம், செடி, கொடிகடிள வளர்க்க வனத்துறையோடு, தமிழ் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு வனத்துறை, தஞ்சாவூர் வனக்கோட்டம் ஆகியயவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகம், பதிவாளர்(பொ) சி.தியாகராஜன், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ஆகிய இருவரும், பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் முன்னிலையில் கையெழுத்திட்டனர். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். மரகதப் பூஞ்சோலைத் திட்ட ஒப்பந்தத்தின்படி, தமிழ் பல்கலைக்கழகம், வனத்துறை இணைந்து இப்பகுதியில் இம்மண்ணின் மரபோடு தொடர்புடைய மரங்கள் மற்றும் சங்க இலக்கியத்தில் காணப்படும் இனங்களில் வாய்ப்புள்ள மரங்கள், செடிகள், மனங்கவர் மலர் வகைகள் ஆகியவற்றை நட்டு வளர்த்து பராமரிப்பது என முடிவு செய்யப்பட்டது. நிகழ்வில் உதவிப்பதிவாளர் நா.இராமகிருஷ்ணன், நிதியலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கண்காணிப்பாளர் மு.கார்த்திகேயன், பொறியாளர் பா.விஜயன், தோட்டப் பொறியாளர் ம.இளங்கோவன், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை இணைப்பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வன், வனச்சரக அலுவலர் ரஞ்சித், வனவர் இளஞ்செழியன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாக் கால விடுமுறை;
300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்
போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல் கும்பகோணம் செப் 13 விழாக்கால விடுமுறையையொட்டி 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள் ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக கும்பகோணம் இயக்கு நர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழ கம் கும்பகோணம் லிட் சார்பில், செப் 16, சனி செப்டம்பர் 17 ஞாயிறு வார விடுமுறை யை மற்றும் முகூர்த்த நாளை யொட்டி யும், திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டியும் மக்களின் வச திக்காக, திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டி னம், திருவாரூர். மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக் கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக் கோட்டை நாகப்பட்டினம், வேளாங் கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக் கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 200 பேருந்துகளும், திருச்ராப்பள்ளியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சி ராப்பள்ளிக்கும், திருச்சிராப்பள்ளியிலி ருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சா வூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 பேருந்துகள் என கூடுதலாக வருகிற வெள்ளி, சனி நாட்க ளில் மொத்தம் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல செப்டம்பர் 18 திங்கள் மற்றும் 19 செவ்வாய் கிழமைகளில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 100 சிறப்பு பேருந்துகளும்,இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்யும் பயணி களின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன் பதிவு செய்து பயணிக்கலாம்.