districts

img

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 26 - ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் விவ சாயத் தொழிலாளர்கள் புறக்கணிக் கப்பட்டுள்ளதைக் கண்டித்து வெள்ளிக் கிழமை டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக் கையில் விவசாயத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தேசிய வேலை உறுதித் திட்டத்தில் கூடுதலாக  நிதி ஒதுக்கவில்லை. ரேசன் கடைக் கான நிதி ஒதுக்கீட்டில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற் கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள் ளனர். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர் களுக்கான கல்வி நிதி ஒதுக்கீட்டை யும் குறைத்ததை கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் சார்பில் வெள்ளியன்று மாநிலம்  தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா  அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாநிலத் தலைவரும், கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப் பினருமான எம்.சின்னதுரை தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் டி.சலோமி, பொருளாளர் கே.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பேசினர். திருவையாறு தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி.கலியமூர்த்தி தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப் ராஜ் குமார், குத்தகை நிலம் பயன்படுத்து வோர் சங்க மாவட்டச் செயலாளர் எம். ராம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டப் பொருளாளர் எம்.பழனி  அய்யா ஆகியோர் உரையாற்றினர்.  பாபநாசம்  பாபநாசம் தலைமை அஞ்சலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலர் முரு கேசன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன்,  மாவட்டக் குழு உறுப்பினர் காதர்  உசேன், ஒன்றியச் செயலர் முரளிதரன்,  சங்கத்தின் ஒன்றியத் தலைவர் இளங்கோவன் ஆகியோர் பேசினர். கும்பகோணம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழி லாளர் சங்க கும்பகோணம் ஒன்றியத் தலைவர் நாகமுத்து தலைமை வகித் தார். ஒன்றியச் செயலாளர் செந்தில்  முன்னிலை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாநிலச் செயலாளர் வி. மாரியப்பன், மாநிலக் குழு உறுப்பினர்  நாகராஜன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அருளரசன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் என். கணேசன், மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் கலா ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.  திருத்துறைப்பூண்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யச் செயலாளர் சி.வீரசேகரன், நகரச்  செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.மாநிலச் செய லாளர் எஸ்.சங்கர் கண்டன உரையாற் றினார் மாவட்டச் செயலாளர் பி.கந்த சாமி, மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, ஒன்றிய-நகரச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

குறைந்தபட்ச கூலி சட்டத்தை நிறைவேற்றுக!

எம்.சின்னதுரை எம்எல்ஏ., பேட்டி

தேசிய வேலை உறுதித் திட்டத் தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை யும் ரூ.600 கூலியும் வழங்க வேண்டும்  என அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால்,  மோடி தலைமையிலான ஒன்றிய அரசோ தற்பொழுது உள்ள நிலை யையே சீர்குலைக்கும் வேலையை செய்து வருகிறது. விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தை நிறை வேற்ற வலியுறுத்தி நீண்ட நாட்களா கப் போராட்டம் நடத்தி வருகிறோம்.  மேலும், விவசாயத் தொழிலாளர் களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்க  வேண்டும் எனவும் போராடி வரு கிறோம். ஒன்றிய அரசு இதைப் பற்றி யெல்லாம் கவலைப்படவில்லை. ஒன்றிய அரசு கட்டிக் கொடுத் துள்ளதாக கூறப்படும் காலனி வீடு கள் பேப்பரில் மட்டுமே உள்ளன. முறைகேடுகளால் முழுமை பெறா மல் பாதியிலேயே நிற்கிறது. வீடு  கட்டுவதற்கு குறைந்தபட்சம் ரூ.10  லட்சம் ஒதுக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு என்று தனித் துறை ஒதுக்கப்பட வேண்டும். அவர் களுக்கு அடையாள அட்டை வழங்கப் பட வேண்டும் என்றார் எம்.சின்னத் துரை எம்.எல்.ஏ.