தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளியில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் உள்ளார்.