முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரும், திமுக மாநில அயலக அணி நிர்வாகியுமான விஜயன், கபிஸ்தலம் அருகே உள்ள திருவைக்காவூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் எழுதுபொருட்களை வழங்கினார்.