தஞ்சாவூர், அக். 1- தமிழக கடலோரங்களில், ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட் டினம் கடற்கரையில் பனை விதைகள் நடப்பட்டது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் பனை விதைகளை நட்டு, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். புதுப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் அமீர் முஹைதீன், புதுப்பட்டி னம் மீனவர் சங்கத் தலைவர் முத்துபொ தியன், கவின்மிகு தஞ்சை இயக்கம், தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் கல்லூரி, திருச்சி இந்திரா காந்தி கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள், குருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர். தொடர்ந்து, மனோரா கடற்கரையிலும் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது. மருதுபாண்டியர் கல்லூரி பேராவூரணி அருகே உள்ள புதுப் பட்டினம் கடற்கரையில் பனை விதை நடும் இயக்கம், தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்றது. இதில் கல்லூரி தலைவர் மருது பாண்டியன் தலைமை வகித்தார். பாரதி தாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை விதை நடும் இயக்கத் தையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் பணியையும் தொடங்கி வைத் தார். ஆயிரக்கணக்கான பனை விதை கள் மாணவர்கள் நடவு செய்தனர். மேலும் கடற்கரை பகுதியில் குவிந் திருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கள் அகற்றப்பட்டன.