தண்ணீர் இன்றி கருகும் குறுவைப் பயிரைக் காப்பாற்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ஏற்று, கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கான உரிமை நீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், எதையும் கண்டு கொள்ளாத ஒன்றிய அரசைக் கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக டெல்டா மாவட்டங்களாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.