திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம் பாடி ஒன்றியம் கல்லகம் கிராமத்தில் ஆராயிபிச்சைப்பிள்ளை பண்டாரம் நிலத்திற்கு போலி ஆவணங்கள் வழங்கிய அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கல்லகம் கிளை சார்பில் வெள்ளியன்று லால்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், ஆராயிபிச்சைப் பிள்ளை பண்டாரம் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக விற்பனை செய்த சாத்தப்பாடி குமார சாமி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். போலியாக பட்டா வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் ஹெலன்ஹென்றி மீதும், தவறு செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நிலத்திலிருந்து வெளியேறு என்று மிரட்டும் ஆதிக்க சக்திகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கும் கல்லக்குடி காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. போராட்டத்திற்கு புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். பின்னர் வட்டார வருவாய் அலுவலர் வைத்தியநாதன் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பழநிசாமி, கிளை செயலாளர் ஆசைத்தம்பி, ஒன்றி யக்குழு உறுப்பினர் பழனி, சுந்தர மூர்த்தி, இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் தவறாக பட்டா வழங்கியவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளிக்கப்பட்டது. இதையடுத்து காத்தி ருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.