districts

அக்.2 சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி மயிலாடுதுறையில் 2 இடங்களிலும், தஞ்சையில் 3 இடங்களிலும் நடக்கிறது

மயிலாடுதுறை, செப்.28 - அக்.2 அன்று நடைபெற உள்ள சமூக நல்லி ணக்க மனிதச் சங்கிலி தொடர்பாக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர், மயிலாடு துறை, பெரம்பலூர் மாவட்டக்குழு அலுவலகத் தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடு துறை மாவட்டக் குழு அலுவலகத்தில் அக்டோபர்  2 காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலை சிறுத்தை கட்சி ஆகிய மூன்று இயக் கங்கள் இணைந்து அறிவித்த மனித சங்கிலி போராட்டத்திற்கான தயாரிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்  செயலாளர் ஏ.சீனிவாசன், விடுதலை சிறுத்தை கள் கட்சி மாவட்ட செயலாளர் ப.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மூன்று கட்சி களின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேங் றனர். அக்.2 ஆம் தேதி மாவட்ட தலைநகரான மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரு மையங்க ளில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவதென திட்ட மிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நல்லி ணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்து இடதுசாரி மற்றும் விசிக உள்ளிட்ட தோழமை கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் துறை மங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவல கத்தில் திங்களன்று நடைபெற்றது.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். சிபிஐ வி.ஜெயராமன், விசிக வீரசெங்கோலன், மனிதநேய மக்கள் கட்சி குதரத்துல்லா, திராவிடர் கழகம் தங்கராசு, தொழிலாளர் கட்சி ஈஸ்வரன், கரும்பு விவசாயி கள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். அக்டோபர் 2 அன்று நடைபெற உள்ள மனிதச் சங்கிலியில் பெரம்பலூர் மாவட்ட மக்கள் பங்கேற்று முழு அதரவு தர வேண்டும் என தெரி விக்கப்பட்டது.
தஞ்சையில் 3 இடங்களில் நல்லிணக்க பேரணி
தஞ்சாவூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, சிபிஐ மாவட்டச் செய லாளர் முத்து.உத்திராபதி தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டச் செயலாளர் சொக்கா.ரவி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.  இதில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் பி.செந்தில்குமார், ஆர்.கலைச் செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.குரு சாமி, என்.சரவணன், எம்.மாலதி, இ.வசந்தி, மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், சிபிஐ  மாவட்டப் பொருளாளர் என்.பாலசுப்பிரமணி யன், மாநகரச் செயலாளர் ஆர்.பிரபாகரன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சி மாநகரச் செயலா ளர் தமிழ்முதல்வன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.  கூட்டத்தில், “அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நடத்தும் பேரணியைக் கண்டித்து, அக்டோபர் 2 ஆம் தேதி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி  பேரணியை, தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர்,  கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங் களில் நடத்துவது” என முடிவெடுக்கப்பட்டது.
கரூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோ சனைக் கூட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கந்தசாமி தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செய லாளர் பி.ஜெயராமன் முன்னிலை வகித்தார். சிபிஎம் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.தண்டபாணி, சிபிஐ மாவட்ட துணை செயலாளர் எஸ்.மோகன்குமார், விசிக மாவட்ட பொருளாளர் சதீஷ்குமார், மாவட்ட நிர்வாக  குழு உறுப்பினர் எம்.லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலர் பேசினர். இக்கூட்டத்தில், அக்.2 அன்று கரூர் காம ராஜர் சிலை முன்பிருந்தும், குளித்தலையில் காந்தி சிலை முன்பிருந்தும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இந்த மனிதச்  சங்கிலி போராட்டத்தில் அனைத்துத் தரப்பு,  மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள், தொழிலா ளர்கள் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

;