districts

img

புதுச்சேரிக்கு புதிய அமைச்சர் நியமனம்

புதுச்சேரி,மார்ச்.5- புதுச்சேரி புதிய அமைச்சராக பி.ஆர்.என்.திருமுருகன் நியமனம் செய்யப் பட்டுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது பதவியை  ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய அமைச்சராக திருமுருகன் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் வடக்கு தொகுதியை  சேர்ந்த அவர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராவார். மார்ச் 7 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் புதிய அமைச்சராக திருமுருகன் பதவி ஏற்றுகொள்கிறார்.