districts

img

தேசிய அளவிலான உறைவாள் போட்டி: கும்பகோணம் மாணவர்கள் சாதனை

கும்பகோணம், ஜன.7- உறைவாள் பெடரேஷன் ஆப் இந்தியா வின் 23-ஆவது தேசிய உறைவாள் சாம்பி யன்ஷிப் போட்டி ஜம்முவில் உள்ள பகவதி  நகர் உள் விளையாட்டு அரங்கில் நடை பெற்றது. இதில் தமிழ்நாட்டிலிருந்து ஈரோடு, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு, சர்வ தேச உறைவாள் போட்டி நடுவரும் தமிழக உறைவாள் போட்டியாளர் சங்கத்தின்  பொதுச் செயலாளருமான ஜெ.செந்தில்குமார், துணை செயலாளர் செல்வம் தலைமையில் கலந்து கொண்டனர். இதில் கும்பகோணம் சாய் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற உறைவாள் போட்டியாளர்கள் ஜூனியர் சீனியர் தனி-குழு,  இரு பாலர் பிரிவுகளில் தங்கம் 4, வெள்ளி 10,  வெண்கலம் 27 என 41 பதக்கங்களை வென்றனர்.