முசிறி, ஏப். 1 - முசிறி நகராட்சியில் நியமன குழு, ஒப்பந்த குழு, வரி விதிப்பு, மேல்முறையீடு குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. இத்தேர்தலுக்கு நக ராட்சி ஆணையர் மனோகரன் தலைமை வகித்தார். நியமன குழு உறுப்பினராக 24 ஆவது வார்டு உறுப்பினர் புதிமிளாவும், ஒப்பந்த குழு உறுப்பினராக 20 ஆவது வார்டு உறுப்பினர் தனசேகரனும், வரி விதிப்பு மேல்முறையீடு உறுப்பினர்களாக சரண்யா தேவி, இந்திரா, வசந்தகுமார், மீனா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட னர்.