districts

திருச்சி முக்கிய செய்திகள்

நலத்திட்ட உதவி வழங்கல்

பாபநாசம், நவ.27 - திமுக இளைஞரணிச் செயலரும், இளைஞர்  நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன் னிட்டு, திமுகவினர் பாப நாசத்தில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. பாபநாசம் ஒன்றிய, பேரூர் கழக அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பொது மக்க ளுக்கு போர்வை வழங்கப் பட்டது. இதில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்  தலைவர் முத்துசெல்வன் உள்பட பலர் கலந்துக்  கொண்டனர். திமுகவின்  சிறுபான்மை அணி  சார்பில் பொதுமக்க ளுக்கு உணவு வழங்கப் பட்டது. சிறுபான்மை அணி மாவட்ட அமைப்பா ளர் அனிபா, துணை அமைப்பாளர்கள், தலை வர்கள், செயலர்கள் கலந்து கொண்டனர்.

கட்டுமான சங்க ஒன்றிய பேரவை

திருச்சிராப்பள்ளி, நவ.27 - திருச்சி மாவட்டம் தா. பேட்டை ஒன்றியம் மாவ லிப்பட்டியில் இந்திய கட்டுமான சங்க ஒன்றிய பேரவை நடைபெற்றது. பேரவைக்கு ஒன்றியச் செயலாளர் தனபால் தலைமை வகித்தார். சங்க மாவட்டச் செய லாளர் பூமாலை, மாவட்ட  துணைத் தலைவர் செல்வகுமார் சிறப்புரை யாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் பாண்டி யன், மாவட்டக் குழு உறுப் பினர் சந்திரமோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றியத் தலை வராக வி.முருகேசன், செயலாளராக ஏ.தன பால், பொருளாளராக ஏ.சசிகுமார், துணை நிர்வாகிகளாக பி.முத்து சாமி, ஆர்.மருதை மற்றும் கமிட்டி உறுப்பி னர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

அறந்தாங்கி, நவ.27- புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடியில் 9,10 ஆம் வகுப்பு ஆசிரி யர்களுக்கு தமிழ் மற்றும்  ஆங்கிலப் பாடத்திற்கான பயிற்சியை நடை பெற்றது. இதை மண மேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையா ளர் (பொ) சிவயோகம் தொடங்கி வைத்தார். பயிற்சியின் கருத்தாளர் களாக   ஜெயானந்த், பிரதாப் சிங் மற்றும் விஜயலெட்சுமி ஆகி யோர் செயல்பட்டனர்.

நிலவேம்பு குடிநீர் வழங்கல்

அறந்தாங்கி, நவ.27- புதுக்கோட்டை மாவட் டம் ஜெகதாப்பட்டினம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாத் சார்பில் நில வேம்பு  குடிநீர் வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை வரு முன் கட்டுப்படுத்தும் வித மாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. ஜெக தாப்பட்டினம் கடைத் தெரு, யாக்கூப்ஹசன் பேட்டை உட்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 600-க்கும் மேற் பட்ட மக்களுக்கு கசா யம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிளை தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சாலையில் திரிந்த மாடு முட்டி ஒருவர் மரணம் அச்சத்தில் கும்பகோணம் மக்கள்

கும்பகோணம், நவ.27- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் முக்கிய இடங்களான மகாமக குளம், பெரிய கடைத்தெரு, நீதிமன்ற  வளாகம், பேருந்து நிலையம், பாலக்கரை மார்க்கெட் ஆகிய இடங்களில், இரவு-பகல்  முழுவதும் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.  இதனால் பாதசாரிகள் மற்றும் பொது மக்களுக்கு பெரும் இடையூறும், போக்கு வரத்து நெரிசலும் ஏற்படுவது குறித்து தீக்கதிர்  நாளிதழில் செய்தி வெளியானது. மாநகராட்சி அலட்சியம் இதுகுறித்து, கும்பகோணம் மாநக ராட்சி 34-வது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பி னர் ஏ.செல்வம், பொதுமக்களுக்கு இடையூ றாக சாலையில் திரியும் மாடுகளை அப்புறப் படுத்தவும், அவற்றை பறிமுதல் செய்து கோ சாலையில் அடைக்கவும் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால், இக்கோரிக்கையை அலட்சியப்படுத்தி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை.  இந்நிலையில் கும்பகோணத்தை அடுத்த  சத்திரம் கருப்பூரைச் சேர்ந்த ஏசுதாஸ் என்ப வர் இருசக்கர வாகனத்தில் வந்த போது,  சாலையில் கூட்டமாக நின்று கொண்டிருந்த  மாடுகளால் தாக்கப்பட்டு நிலை தடுமாறி கீழே  விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார். இதேபோல் சாலைப் போக்குவரத்தை சீர்செய்து கொண்டிருந்த காவல் அதிகாரி யும் மாடு முட்டியதில் காயமடைந்து, உயிர்  தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. மாடுகளால் தாக்கப்பட்டால் உயிருக்கு யார் பொறுப்பு என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இனியும் மாநகராட்சி நிர் வாகம் அலட்சியப்படுத்தாமல், கும்பகோ ணம் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையில் இரவு-பகலாக சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி கோசாலையில் விட வேண்டும். இதனை மீறும் மாடு உரிமையா ளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தனியார் பேருந்து  மோதி ஒருவர் பலி

தஞ்சாவூர், நவ.27 -  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கபில்தேவ் (36). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை இரவு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பேருந்தை அதன் ஓட்டுநர் இயக்கியுள்ளார். இதனால் பேருந்தின் பக்கவாட்டில் நின்ற கபில்தேவ் நிலை தடு மாறி கீழே விழுந்த போது, பேருந்தின் பின் சக்கரம் கபில்தேவ் மீது ஏறி இறங்கி யது. இதில் அவர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவ லறிந்த தஞ்சாவூர் போக்கு வரத்து விசாரணை பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, கபில் தேவ் உடலைக் கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி  வைத்தனர். போக்குவரத்து விசாரணை பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிந்து  விசாரணை நடத்தி வரு கின்றனர்.

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு  குடும்ப அட்டை: ஆட்சியர் தகவல் 

தஞ்சாவூர், நவ.27-  இந்திய உச்சநீதிமன்றம் இ-ஷ்ரம் (e-Shram) இணைய தளத்தில் பதிவு செய்துள்ள வெளி மாநிலத் தொழிலா ளர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  இதன்படி ஏற்கனவே இ-ஷ்ரம் (e-Shram) இணைய தளத்தில் பதிவு செய்துள்ள, இதுவரை குடும்ப அட்டை  கிடைக்கப் பெறாத, புலம்பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலா ளர்கள் தங்களுக்கு குடும்ப அட்டை தேவைப்படும் நேர்வில், தாங்கள் வசிக்கும் வட்டத்திற்குட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று, அதற்கான படி வத்தைப் பெற்று, தங்களது சொந்த மாநிலத்தைப் குறிப் பிட்டு படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம்.  உணவுப் பொருள் வழங்கல் துறையின் கள அலுவ லர்கள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு தகுதியான நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படும் என தமிழ்நாடு அ ரசு தெரிவித்துள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இ-ஷ்ரம் (e-Shram) இணை யதளத்தில் பதிவு செய்துள்ளவர்கள், அவர்கள் வசிக்கும் வட்டத்தினைச் சேர்ந்த வட்ட வழங்கல் அலுவலர்களிடம் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

பேராவூரணியில்  வட்ட சட்டப் பணிகள் குழு துவக்கம்

தஞ்சாவூர், நவ.27 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், வட்ட சட்டப்பணி கள் குழு துவக்கி வைக்கப்பட்டது.  நாடு முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வட்ட மற்றும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கி யுள்ள அனைவருக்கும், சட்ட ரீதியான அனைத்து உதவி களையும் வழங்க இந்த சட்டப்பணிகள் குழு ஏற்படுத்தப்படு கிறது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டப் பணிகள் குழு மூலம் முகாம் நடத்தப்படுகிறது.  அந்த வகையில், பேராவூரணி நீதிமன்ற வளாகத்தில், வட்ட சட்டப் பணிகள் குழு அண்மையில் துவக்கி வைக்கப் பட்டது. மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி என்.அழகேசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். அரசு குற்றவியல் உதவி வழக்கறிஞர் ஐ.பாண்டியராஜன், வழக்கறிஞர் சங்கம் தலைவர் எஸ்.மோகன், செயலர் குழ.செ.அருள்நம்பி, பொருளாளர் ஏ.சுசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல்துறை உதவி ஆய்வாளர் துரைராஜ், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் குறைதீர் கூட்டம்: 463 மனுக்கள் குவிந்தன

பெரம்பலூர், நவ.27 - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இதில்  மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக ஏற்பாடு செய்யப் பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று, அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றார்.  தொடர்ந்து,பலருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டு மனைப்பட்டா, விதவை  உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை,  பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 463 மனுக்கள் பெறப்பட்டன.

பொறியியல் கல்லூரி மாணவரின்  கழுத்தை அறுத்த சக மாணவர் கைது

கரூர், நவ.27 - குளித்தலை அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவனின் கழுத்தை கத்தியால் அறுத்த எம்பிஏ மாணவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் நிதிஷ்குமார் (19). இவர் கரூரை அடுத்த புலியூரில் உள்ள செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த அண்ணாமலை (23) என்பவர் எம்பிஏ படித்து வருகிறார். இருவரும் அருகருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால், கல்லூரி வேனில் ஒரே இருக்கையில் அமர்ந்து வந்துள்ளனர். இதனால் இருவரும் நெருங்கிப் பழகி வந்தார்களாம். இதனிடையே இருவரும் கடந்த சில நாட்களாக வேனில் பேசிக் கொள்ளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அண்ணாமலை, நிதிஷ்குமார் வீட்டிற்குச் சென்று ‘நீ என்னுடன் பழகாவிட்டால் நான் உயிரோடு இருக்க முடியாது’ எனக்கூறி அழுதுள்ளார். இதனால் கோபமடைந்த நிதிஷ்குமாரின் பெற்றோர் அண்ணாமலையை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் திங்கள்கிழமை காலை இருவரும் கல்லூரி வேனில் குளித்தலையை அடுத்த சத்தியமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அண்ணாமலை ‘ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்’ என கேட்டுள்ளார். ஆனால் அப்போதும் நிதிஷ்குமார் பேசவில்லையாம். இதில் ஆத்திரமடைந்த அண்ணாமலை தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென நிதிஷ்குமாரின் கழுத்தை அறுத்துள்ளார். நிதிஷ்குமார் அலறி துடித்ததால், வேன் ஓட்டுநர், வேனை உடனே குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் சக மாணவர்கள் நிதிஷ்குமாரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த குளித்தலை போலீசார் மாணவர் அண்ணாமலையை கைது செய்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். நிதிஷ்குமாருக்கு குளித்தலை அரசு மருத்துவமனையில் கழுத்தில் தையல் போடப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

துப்பாக்கி விற்பனை:  ஊராட்சி மன்றத் தலைவர் குண்டர் சட்டத்தில் கைது

தஞ்சாவூர், நவ.27 -  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணஞ்சேரி  பகுதியில் பிஸ்டல் கை துப்பாக்கி புழக்கத்தில் இருப்ப தாக திருச்சி நுண்ணறிவு பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தங்கியிருந்து ரகசிய மாக கண்காணித்தனர். இந்நிலையில், கடந்த நவ.7 அன்று திருப்புறம்பியம் பகுதியைச் சேர்ந்த தென்றல்(33) என்பவரிடமிருந்து பிஸ்டல்  கைத் துப்பாக்கியை காவல்துறையினர் கைப்பற்றினர்.  அவர் அளித்த தகவலின் பேரில், கள்ளப்புலியூர் ஊராட்சி  மன்றத் தலைவரான மணஞ்சேரியைச் சேர்ந்த பெரியவன் என்ற முருகன் (45), புதுச்சேரியில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்களை வாங்கி, அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த நவ.8 அன்று முருகன், அவரது நண்பர்களான கீழ்ப்பறட்டைச் சேர்ந்த ஈஸ்வரன் (21), உமா மகேஸ்வரபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (26), பாலக்கரை யைச் சேர்ந்த மணிகண்டன் (26), ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 14 தோட்டாக்கள், 2 கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த னர். பின்னர் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் திருச்சி மத்திய  சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், துப்பாக்கி சப்ளை செய்த முருகனை குண்டர் சட்டத்தின்கீழ், சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரைத்தார். அதன்பேரில்,  முருகன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.