திருச்சிராப்பள்ளி, ஜூலை 2- திருச்சி மத்திய பேருந்து நிலை யத்தில் கீரனூர் டவுன் பேருந்து நிற்கும் இடத்திற்கு அருகில் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் 26 பேர் கொய்யா, மாம்பழம் உட்பட அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங் களை, தள்ளுவண்டிகளில் விற்று வரு கிறார்கள். இங்கு இவர்கள் சுமார் 20 ஆண்டு காலமாக வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்கு தரைக் கடைகளை நடத்து வதற்கு மாநகராட்சியால் அங்கீகரிக்கப் பட்ட தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். மேலும் இங்குள்ள 26 கடைகளையும் அகற்றக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை யாணை பெற்றுள்ளனர். இந்த தடையா ணையில், தரைக்கடைகளை அகற்று வதற்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல் உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தரைக் கடைகளை நடத்த பாதுகாப்பு வழங்கிட வும், தரைக்கடை வியாபாரிகளை பாது காத்திட உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 2014 இல் மத்திய அரசு சட்டம் இயற்றி யுள்ளது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி மாநகராட்சி மேயர்-ஆணையரிடம் சிஐடியு சார்பில் ஏற்கனவே மனு அளிக் கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மாநக ராட்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையர் சண்முகம் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் மத்திய பேருந்து நிலைய பகுதியில் பழக்கடையை அள்ளி குப்பை வண்டியில் ஏற்ற முயற்சித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, மாவட்டத் தலைவர் கணேசன் ஆகியோர் உதவி ஆணையரிடம் கடைகளை அப்புறப் படுத்த கூடாது என்றும், தடையாணை பெற்றுள்ளோம் எனக் கூறிய பிறகும் அதை ஏற்றுக் கொள்ளாமல் கடை களை அப்புறப்படுத்தினர். இதை யடுத்து வியாபாரிகள் நூற்றுக்கணக் கானோர் சாலையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநக ராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் அங்கிருந்து சென்றனர். பின்னர் இதுகுறித்து சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் கூறுகையில், “சென்னையில் நடந்த திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் சாலையோர வியாபாரிகளிடம் மாமுல் கேட்கக் கூடாது. மாமுல் கேட்டு தொந்தரவு செய்யும் நிலை தொ டர்ந்தால் பதவி இழக்கும் நிலை ஏற்படும் என்றார். இந்நிலையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள தரைக்கடை வியாபாரிகளிடம் ஆளும் கட்சியினர், கடை நடத்த மாமூல் தர வேண்டும். இல்லை என்றால், உங்கள் கடைகளை எடுத்துவிட்டு எங்களுக்கு மாமுல் தரக் கூடியவர்களை கடை நடத்த விடுவோம் என்று மிரட்டி, சில வியாபாரிகளிடம் தொகை பேரம் பேசப் பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி ஆணையர் மாமுல் கேட்டு கடைகளை அப்புறப்படுத்தும் முயற்சியை தடுத்து நிறுத்தி, தரக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்” என்றார்.