districts

திருச்சியில் இன்று ‘வணிகர் விடியல்’ மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி, மே 4- திருச்சியில் வியாழனன்று (மே 5)  நடைபெறும் வணிகர் விடியல் மாநாட் டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39-வது வணிகர் தினத்தை முன்னிட்டு ‘தமிழக வணிகர்  விடியல் மாநாடு’ திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் பிரம்மாண்டமான மைதானத்தில் வியாழனன்று காலை  8.30 மணிக்கு பேரமைப்பு கொடி யேற்றத்துடன் தொடங்கி மாலை வரை  நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலை வர் விக்கிரமராஜா தலைமை வகிக்கி றார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்கிறார். பொருளாளர் சதக்கத்துல்லா மாநாட்டுத்  தீர்மானங்களை வாசிக்கிறார். அகில இந்திய வணிகர்கள் சம்மேளன (சிஏஐடி)  தேசிய தலைவர் பி.சி.பார்ட்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண் டேல்வால் ஆகியோர் மாநாட்டை துவங்கி வைத்து பேசுகின்றனர். அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு வணிகர் விடியல் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முது பெரும் வணிகர்களுக்கு, ‘வ.உ.சி  வணிகச் செம்மல் விருதுகள்’ வழங்கி,  நலிந்த வணிகர்களின் வாரிசுகளுக்கு க.மோகன் நினைவாக கல்வி ஊக்கத் தொகை வழங்கி பேருரையாற்றுகிறார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்  மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி ஆகி யோரும் சிறப்புரையாற்றுகின்றனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்  கலை நிகழ்ச்சியும் மாலையில் மாவட்ட  தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் வாழ்த்துரை நடைபெறுகிறது. சென்னை யில் சிறப்பாக நடைபெற்ற 38-வது  வணிகர் தின மாநாட்டை நடத்திய  நிர்வாகிகள் கௌரவிக்கப்படு கிறார்கள். இம்மாநாட்டில் தமிழகம் முழு வதும் இருந்து லட்சக்கணக்கான வணி கர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;