districts

img

மாதர் சங்க திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய மாநாடு

திருத்துறைப்பூண்டி, ஏப்.25 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி தெற்கு ஒன்றிய 16 ஆவது ஒன்றிய மாநாடு திங்கட்கிழமை நடைபெற்றது. முன்னதாக கட்டிமேடு கடைத்தெருவில் ஊர்வலமாக துவங்கி, கட்டிமேடு ஏ.ஏ.சன்ஸ் திருமண மண்டபத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி யோடு மாநாடு துவங்கப்பட்டது. மாதர் சங்க  மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். மாநாட்டை வாழ்த்தி மாநிலத் தலைவர் வாலண்டினா, மாவட்டச் செயலா ளர் பி.கோமதி, ஒன்றியச் செயலாளர் பவானி  பேசினர். மாநாட்டில் தலைவராக மேகலா, செயலா ளராக கலைச்செல்வி, பொருளாளராக தனுஷ் நாத், துணைத்தலைவராக பவானி,  துணைச் செயலாளராக மாலதி உள்ளிட்ட 15 புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.