கள்ளச்சாராயப் பேர்வழிகளை ஒடுக்கத்தவறிய கள்ளக்குறிச்சி காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்,அரசு அதிகாரிகள்,துணை நின்ற அரசியல் முக்கிய புள்ளிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சூளகிரி வட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, வட்ட குழு நிர்வாகிகள் ஹேமாவதி,தனலட்சுமி, மாதேஸ்வரி உட்பட பலர் பேசினர்.