கும்பகோணம், ஜன.25 - தஞ்சை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கும்பகோணம் அண்ணா அரண் மனையில், மொழிப்போர் தியாகிகளின் உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை வடக்கு மாவட்டக் கழக செயலா ளர் சு.கல்யாணசுந்தரம், மாநில மாணவர் அணி இணைச் செயலாளரும் அரசு தலை மைக் கொறடாவுமான முனைவர் கோவி.செழியன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் க.செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் கோவி.அய்யாராசு, கும்ப கோணம் மாநகர செயலாளர் சு.ப.தமிழ ழகன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தி.கணேசன், திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கோ.க. அண்ணாதுரை, கும்பகோணம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.கே.பாஸ்கர் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மல ரஞ்சலி செலுத்தினர்.