districts

திருச்சி முக்கிய செய்திகள்

அடிப்படை வசதியில்லாத  மணக்காடு மேல்நிலைப்பள்ளி

தஞ்சாவூர், அக்.5-  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் நூற் றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  பள்ளிக்குப் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாத நிலையில், மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் கல்வி  பயின்று வருகின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் கிராம மக்கள் சம்பந்தப்பட்ட துறை  அலுவலர்களுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போது “மழைக்காலம் தொடங்கி விட்டது. மாண வர்கள் மரத்தடியில் அமர்ந்து படிப்பது நீடிக்கிறது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி அக்.16-ஆம்  தேதி சமூக ஆர்வலர் உண்ணாவிரதம் இருக்கப்போவ தாக அறிவித்துள்ளார்.

அறிஞர்அண்ணாமாரத்தான் போட்டி பங்கேற்க ஆட்சியர் அழைப்பு 

திருச்சிராப்பள்ளி,அக்.5- அறிஞர் அண்ணாமாரத்தான் ஓட்டப்போட்டி ஆண்  பெண் இருபாலருக்கும் இரு பிரிவுகளில் அக்.7-ஆம் தேதி  அன்று திருச்சிராப்பள்ளி அண்ணாவிளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ, பெண்  களுக்கு 5.கி.மீ போட்டியும், 25 வயதிற்குமேற்பட்ட ஆண்  களுக்கு 10.கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ தூர மாரத்தான்  போட்டி நடைபெற உள்ளது. போட்டிகள் அனைத்தும் காலை 6 மணிக்கு தொடங்கும்.  போட்டிகளில் கலந்துக் கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆதார்கார்டு மற்றும் பிறப்புசான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும். முதல் பத்து இடங்களில்  வெற்றிபெறுவோருக்கு பரிசுத்தொகை- சான்றிதழ்ள் வழங்கப்படும்.  பரிசுத் தொகை வங்கி கணக்கில் வழங்கப்படும். எனவே வங்கிப் புத்தக நகலுடன் வர வேண்டும். மேலும்  விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டுமற்றும் இளை ஞர்நலன் அலுவலர் அண்ணா விளையாட்டரங்கம் திருச்சி ராப்பள்ளி தொலைபேசிஎண். 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்டஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தஞ்சாவூர், அக்.5 -  தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி யில், புதன்கிழமை முதுகலை விலங்கியல் துறை, இளையோர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு  நடவடிக்கைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி யை நடத்தினர்.  கருத்தரங்கத்தை கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஜான் பீட்டர்  துவக்கி. மாநகராட்சி நல அலுவலர் மருத்துவர் வி.பி.சுபாஷ் காந்தி,  மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் மருத்துவர் தையல்நாயகி ஆகி யோர் கலந்து கொண்டு, டெங்கு காய்ச்சல் பரவுதல் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கருத்துரையாற்றினார்.  இந்நிகழ்வில் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தங்கமதி, செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் சரபோஜி, விலங்கி யல் துறைத் தலைவர் சந்திரகலா, பேராசிரியர் சுகுமாரன் மற்றும் தஞ்சா வூர் மன்னர் சரபோஜி கல்லூரி, குயின்ஸ் கலை அறிவியல் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, மேலையூர் பூம்புகார் கல்லூரி ஆகிய கல்வி நிறு வனங்களைச் சேர்ந்த மாணவிகள்-பேராசிரியர்கள் பங்கேற்றனர். 

குடவாசல் அரசு மருத்துவமனைக்கு விரைவில் கூடுதல் மருத்துவர்கள்  பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உத்தரவாதம்

திருவாரூர், அக்.5- குடவாசல் அரசு மருத்துவமனைக்கு விரைவில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர். குடவாசல் அரசு மருத்துவமனையில் உள்ள பல்வேறு சீர்கேடுகளைக் கண்டித்து மாதர் சங்கம் சார்பில் அக்.5- ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்து. தகவ லறிந்த குடவாசல் வட்டாட்சியர், மருத்துவ  இணை இயக்குநர் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி, நகர் செயலாளர் டி.ஜி.சேகர், மாவட்டக்குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா. மாதர் சங்கத் நகர் செய லாளர் டி.ஜி.தமிழ்செல்வி, தலைவர் பா. பமிதா, ஒன்றியச் செயலாளர் கே.ஜெக தீஸ்வரி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், குடவாசல் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக இரண்டு மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். காலை,  மாலை இருவேளையும் வெளி நோயாளி கள் பிரிவு செயல்படும். மனநல மருத்துவர் மற்றும் உதவி யாளர் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் வியாழக்கிழமை வருகை தருவர். எக்ஸ்ரே டெக்னீஷியன் வருகை தரும் நாட்கள் குறித்து அறிவிப்புப் பலகை வைக்கப்படும். மருத்துவமனை ஊழியர் குடியிருப்பு, சுற்றுச்சுவர் கட்டுவது தொடர்பாக பொதுப்பணிதுறையிடம் தெரிவிக்கப்படும், விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவு, கழிவறையுடன் உள்ள பிரசவ வார்டு  முன்புயிருந்த பொது வார்டிலேயே இயங்கும். தூய்மைப் பணியாளர்கள், கட்டு கட்டுபவர்கள் உடனடியாக பணிக்கு  அமர்த்தப்படுவார்கள் என எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் உருவானது.

கரூர் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

கரூர், அக்.5- கரூர் மாவட்டத்தில் இரண்டாவது புத்தகத்திருவிழா (இன்று) அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை  11 நாட்கள் நடைபெறுகிறது. 100 அரங்கில் பல்லாயிரக்க ணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவிற்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல்  தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடை பெறும்.  முதல் நாளான வெள்ளிக்கிழமை “உலகம் இப்படித்  தான்” என்ற தலைப்பில் புலவர்.இரெ.சண்முகவடிவேல், “நூலை வாசிப்போம் வாழ்வை நேசிப்போம்” என்ற தலைப்  பில் கோவை சாந்தாமணி ஆகியோர் உரையாற்றுகின்றனர். ஒவ்வொரு நாளும் பள்ளிக், கல்லூரி மாணவர்கள் புத்த கத் திருவிழாவில் பங்கு கொள்வதற்கு ஏதுவாக பேருந்து வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் இந்தப் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென ஆட்சியர் த.பிரபுசங்கர் கேட்டுக்  கொண்டுள்ளர்.

நாகர்கோவில் பேருந்து நிலைய கழிப்பறையை சீர்படுத்துக!  சிஐடியு கோரிக்கை

நாகர்கோவில், அக்.5- நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மிக மோசமான நிலையில் இருக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் பயன்படுத்தும் கழிவறை மற்றும் ஓய்வறைகளை சீர்படுத்திட கேட்டு சிஐடியு சார்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளரிடம்  பொதுச் செயலாளர் சுரேஷ் சி  மார்த்தாண்டம், செயல் தலைவர் லட்சுமணன், துணை பொதுச் செயலாளர்கள் அஜி, மனோஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு கொடுத்தனர். 

வீரவநல்லூர் அருகே  கால்வாயில் மூழ்கி  தொழிலாளி பலி

  திருநெல்வேலி அக் 5- நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( 35). இவர் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.  இவர் புதன்கிழமை வீரவநல்லூர் அருகே கன்னடியன் கால்வாயில் குளிப்பதற்காக சைக்கிளில் சென்றார். மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால்அவரது உறவினர்கள் கால்வாய் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அவரது சைக்கிள் மற்றும் ஆடைகள் மட்டும் இருந்தன. இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினருக்கு தகவலதெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியனை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.இந்நிலையில் வியாழக் கிழமை காலை கொட்டாக்குறிச்சி பகுதியில் சுப்பிரமணி யன் கால்வாயில் பிணமாக மிதந்து கிடந்தார்.  அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரி சோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளையில் பள்ளி மாணவர் தடகள போட்டி


   திருநெல்வேலி, அக் 5- பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நெல்லையில் மாவட்ட அளவில் 3 நாள் தடகள போட்டி பாளையங்கோட்டை அண்ணா உள் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் உள்பட 79 போட்டி கள் நடத்தப்படுகிறது. போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் செங்கல்பட்டில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். 

நகை திருடியவருக்கு 2 ஆண்டு சிறை 

    திருநெல்வேலி,அக். 5- நகை திருடிய டெய்லருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் மேலரதவீதியைச் சேர்ந்தவர் கவிதா ( 49). இவர் கடந்த 9.12.2013 அன்று வள்ளியூரில் டெய்லர் கடை நடத்தி வரும் ஏர்வாடி ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள் என்ற முருகன் (48) கடைக்கு சென்று துணியை தைய்க்க கொடுத்தார். அப்போது அவர் மணிப்பர்சை அங்கேயே மறந்து விட்டு சென்றார். சிறிதுநேரத்தில் கவிதா நகை இருந்த மணிப்பர்சை டெய்லர் கடையில் மறந்து விட்டு வந்ததை உணர்ந்து திரும்பி சென்றார். அப்போது மணிப்பர்சில் நகைகள் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கவிதா அளித்த புகாரின்பேரில், வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கவிதாவின் மணிப்பர்சில் இருந்த நகைகளை டெய்லர் பெருமாள் திருடி மறைத்து வைத்தது தெரிய வந்தது. எனவே அவரை கைது செய்து நகைகளை மீட்டனர். இந்த வழக்கு விசாரணை வள்ளியூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் குற்றம் சாட்டப் பட்ட பெருமாளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

கருங்காடு பகுதியில் வாழைகளை  நாசப்படுத்திய காட்டுப்பன்றிகள்  விவசாயிகள் வேதனை

திருநெல்வேலி அக். 5- நெல்லை மாவட்டம் கருங்காடு பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிர்கள் நடப்பட்டுள்ளன. வாழைப்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகமும் வனத்துறையினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  மேலும் சேதமான வாழை பயிர்களால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டதாகவும் விவசாயிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

சாலை -பொது இடங்களில் நிறுத்திய  வாகனங்களை அப்புறப்படுத்துக! தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு

தூத்துக்குடி,அக்.5- தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சாலை மற்றும் பொது இடங்களில் நிறுத்தப் பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தூத்துக் குடி மாநகராட்சி ஆணையா ளர் தினேஷ் குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சாலை மற்றும் பொது இடங்களை ஆக்கிர மித்து நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாக னங்களால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக அமைந்துள் ளதுடன் விஷஜந்துக்கள் தங்குமிடமாகவும் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் காணப்படுகிறது. எனவே இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கும் வகையில் அவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை 7 தினங்க ளுக்குள் அவ்வாகனங்க ளின் உரிமையாளர்களே தாங்களுக்கு பாத்தியப்பட்ட சொந்த இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும்.  சாலை மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்க ளாக நிறுத்திவைக்கப் பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தாத வாகன உரிமையாளர்களுக்கு அப ராதம் விதிப்பதுடன் 1998 ஆம் வருடத்திய தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமை ப்புகள் சட்டப்பிரிவு எண் 128-இன் படி நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நிறுத்தப்பட்டிருக்கும் வாக னங்களை அப்புறப்படுத் தாதப்பட்சத்தில் மாநகராட்சி யால் அகற்றி, பறிமுதல் செய்வதோடு எக்காரணம் கொண்டும் திருப்பி அளிக் கப்படாது மேலும் அவ் வாகனத்தை அப்பபுறப்படுத் துவதால் ஏற்படக்கூடிய செலவினங்களையும் சம்பந் தப்பட்ட நபர்களிடமிருந்து வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

அரசுப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து  பொருட்களை சேதப்படுத்திய 5 பேர் கைது

தூத்துக்குடி,அக்.5- முறப்பநாடு அரசு பள்ளியில் அத்துமீறி நுழைந்து பெஞ்ச் மற்றும் டேபிள்களை சேதப்படுத்திய  5 பேரை போலீசார் கைது செய்தனர்.  தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் காலாண்டு விடுமுறை முடிந்து  பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது, அடை யாளம் தெரியாத நபர்கள் பூட்டப்பட்டி ருந்த பள்ளி வகுப்பறையை உடைத்து  மது அருந்தியும், புகைபிடித்தும், வகுப்பறை யினுள் இருந்த பெஞ்ச் மற்றும் டேபிள் களை உடைத்தும்  புத்தகங்களைக் கிழித்தும்  சேதப்படுத்தியிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகன் அளித்த புகாரின் பேரில்  தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் உத்தர வின்படி முறப்பநாடு போலீசார் தீவிர விசா ரணை மேற்கொண்டனர், இதில், வல்ல நாடு பகுதியை சேர்ந்தவர்களான தம்பான் மகன் சிந்தாமணி (21), கோமு மகன் உத்தண்டராமன் (24), மாயாண்டி மகன் மாரி யப்பன் (22), மாரிமுத்து மகன் பேச்சிமுத்து (23) மற்றும் இசக்கிமுத்து (எ) முத்து மகன் இசக்கிகணேஷ் (எ) கணேஷ் (22) ஆகியோர் மேற்படி பள்ளியில் அத்து மீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களை சேதப் படுத்தியது தெரியவந்தது. போலீசார்  5 பேரையும்  கைது செய்தனர்.