அரியலூர், ஆக.7-
அரியலூர் ரயில் நிலையம் அருகேயுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மக்காச் சோளம், சூரியகாந்தி, வேப்பங்கொட்டை ஆகியவை திங்கள்கிழமை ஏலம் போயின. மறைமுக ஏலத்துக்கு வந்த 5 விவசாயிகளின் 3,102 கிலோ மக்காச்சோளம் ரூ.70,907-க்கு விலை போனது. அதனை தொட ர்ந்து 1,155 கிலோ சூரியகாந்தி ரூ.41,782-க்கும், 439 கிலோ வேப்பவத்தல் ரூ.21,256-க்கும், 72 கிலோ வேப் பங்கொட்டை ரூ.8,654-க்கும் விற்பனையா கின. இதில் மொத்தம் ரூ.1,42, 599-க்கு வர்த்தகம் நடைபெற்றது.