மயிலாடுதுறை, மார்ச் 17 - மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சிறப்பு கருத்தரங்கு ஞாயிறன்று நடை பெற்றது. “பட்டியல், பழங்குடியின மக்கள் உரிமைகளை பாதுகாப்போம்; பார ‘தீய’ ஜனதா கட்சியை புறக்கணிப் போம்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் சி.மேகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வ.பழனி வேலு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கலைச்செல்வன், ஞானபிரகாசம் (ஊராட்சி மன்ற தலைவர்), மாவட்ட துணைச் செயலாளரும் ஊராட்சி தலை வருமான அ.நேதாஜி, அமுல்காஸ்ட்ரோ, கண்ணகி, சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் ஏ.ஆர். விஜய் வரவேற்றார். அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலா ளர் பழ.வாஞ்சிநாதன், சிபிஎம் மாவட் டச் செயலாளர் பி.சீனிவாசன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.துரைராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர் ஜி.ஸ்டாலின், மாவட்டச் செய லாளர் எஸ்.இளங்கோவன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.வெண்ணிலா ஆகியோர் உரையாற்றினர். அமைப்பின் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலாளர் ஏ.அறிவழகன் நன்றி கூறினார். முன்னதாக மாவட்டக் குழு சார்பில் மைய நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.