districts

திருச்சி முக்கிய செய்திகள்

குரும்பலூர் அரசு கல்லூரி  பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜன.2 - இரண்டு மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி விரிவுரையாளர்களும் ஆசிரியர் அல்லாத அலு வலக பணியாளர்களும் செவ்வாயன்று கல்லூரி நுழை வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் வ.சந்திரமௌலி தலைமை வகித்தார். மிக குறைவான ஊதியம் பெறும் கௌரவ விரிவுரை யாளர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலக பணியாளர் களின் ஊதியத்தை அந்தந்த மாதம் கொடுக்க வேண்டும். நிலு வையிலுள்ள கடந்த நவம்பர், டிசம்பர் ஆகிய 2 மாத ஊதி யத்தை உடனே வழங்க வேண்டும். அரசு கருவூல ஊதியப்  பட்டியலில் சேர்க்கப்படாத கௌரவ விரிவுரையாளர்களை யும், ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரையும் விரைந்து கருவூல ஊதியப் பட்டியலில் சேர்த்து பணிப்  பாதுகாப்பு வழங்க வேண்டும். விடுபட்ட பாடப்பிரிவு களுக்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாற்றுத் திறனாளிகளுக்கான  சமூக தரவு பதிவுகள் சேகரிக்கும்  பணிக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்

தஞ்சாவூர், ஜன.2-  தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு 2023 செப்டம்பர் மாதம் தொடங்கி 2023 டிசம்பர் மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்  கட்டமாக 5 மாவட்டங்களில் சமூக தரவு பதிவுகள் நடத்தப் பட்டன.  அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் டிச.3 முதல் சமூக தரவு பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இக்கணக் கெடுப்பு பணியை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க  களப் பணியாளர்களும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களும் மேற்கொண்டு வருகின்ற னர். மாற்றுத்திறனாளிகள் விவரம் குறித்த கணக்கெடுப்பிற் காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் தகவல்கள் பதிவு செய்யப்படும். எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும், குடும்ப உறுப்பினர்களும் தங்க ளது தகவல்களை இக்கணக்கெடுப்பில் முழுமையாக வழங்க  வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  கேட்டுக் கொண்டுள்ளார்.

பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளியில்  ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், ஜன.2 -  மாற்றுத்திறனாளிகள் நல இயக்கு நரகத்தின்கீழ் செயல்பட்டு வரும், தஞ்சாவூர் பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள 3 முதுகலைப் பாட ஆசிரியர், 3 பட்ட தாரி ஆசிரியர் மற்றும் 3 இடைநிலை ஆசிரி யர் ஆகிய பணியிடங்கள், மதிப்பூதிய அடிப்படையில், முழுமையான கல்வித் தகுதி கொண்ட நபர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. பெறப்படும் விண்ணப்பங்களில், பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழுவின் மூலம் நடத்தப்படும் நேர்முகத்  தேர்வின் அடிப்படையில், முற்றிலும் தற்கா லிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப் படுவர். இதில், முதுகலை பாட ஆசிரியர் பிரி வில் புவியியல், பொருளியல், கணினி பயன் பாடு ஆகியவற்றிற்கு தலா ஒரு காலிப் பணி யிடங்களும், பட்டதாரி ஆசிரியர் பிரிவில் தமிழ், கணிதம், அறிவியல் ஆகியவற்றிற்கு தலா ஒரு காலிப் பணியிடங்களும், இடை நிலை ஆசிரியர் பிரிவில் மூன்று காலிப் பணி யிடங்களும் நிரப்பப்பட உள்ளன.  இதற்கு உரிய கல்வித் தகுதிகளுடன் தேர்வு செய்யப்படும், முதுகலை பாட ஆசிரி யர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.18 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மதிப்பூதியமாக ரூ. 15 ஆயிரம், இடைநிலை ஆசிரியர் களுக்கு மதிப்பூதியமாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும்.  தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தகுதி  வாய்ந்த நபர்கள் தங்களது விண்ணப்பங் களை, பார்வைத் திறன் குறையுடையோருக் கான அரசு மேல்நிலைப் பள்ளியில், 9.1. 2024 அன்று நேரடியாகவோ அல்லது தபால்  மூலமாகவோ ஒப்படைத்து, பின்னர் நடைபெ றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என  மாவட்ட ஆட்சியர் தலைவர் தீபக் ஜேக்கப்  தெரிவித்துள்ளார்.

ஜன.10 முதல் சபரிமலையில் நேரடி பதிவு இல்லை
மகரவிளக்கிற்கு ஆன்லைன் முன்பதிவு 40 ஆயிரம் மட்டுமே!

சபரிமலை, ஜன. 2- ஜனவரி 10 முதல் சபரிமலை தரிசனத்திற்கு நேரடி பதிவு வசதி இல்லை என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 14 ஆம் தேதி ஆன்லைன் வரிசை  முன்பதிவு வரம்பு 50 ஆயிரமாக வும், மகரவிளக்கு நாளில் 15  ஆம் தேதி முன்பதிவு வரம்பு 40  ஆயிரமாகவும் வரையறுக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவிக்கையில், தரிச னத்திற்கு வருபவர்களுக்கு ஆன் லைன் வரிசைக்கான சீட்டுகள் கட்டாயம். பக்தர்களுக்கு சுமுக மாகவும், பாதுகாப்பாகவும் தரிசன வசதி ஏற்படுத்தவே புதிய ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. சபரிமலை யில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், ஜனவரி 10ஆம் தேதி  முதல் தரிசனத்துக்கான நேரடி பதிவை தவிர்க்க முடிவு செய்யப் பட்டுள்ளது. பொதுவாக மகரவிளக்குக்கு மூன்று நாட்களுக்கு முன் சபரி மலைக்கு வரும் பக்தர்கள் சன்னி தானத்தை விட்டு மகரவிளக்கு மற்றும் திருவாபரண தரிசனம் செய்து சபரிமலையில் முகாமிடு வதில்லை. இந்நிலையில், அதிக மான பக்தர்கள் மீண்டும் மலை ஏறி னால், பாதுகாப்பு மற்றும் சுமூக மான தரிசனம் கடுமையாக பாதிக்கப் படும். வரும் 14, 15 ஆகிய தேதி களில் பக்தர்கள் கூட்டம் அதிக மாக இருக்கும் என்பதால், அந்த  நாட்களில் மாளிகப்புரம் (பெண்கள்)  மற்றும் குழந்தைகள் சபரிமலை தரிசனத்தை தவிர்க்க வேண்டும் என்று தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் வரும் 16 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை  அதிக பக்தர்கள் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள்:  அரசு ராஜாஜி மருத்துவர்கள் தகவல்

மதுரை, ஜன.2-  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புத்தாண்டு தினமான திங்களன்று மாலை 6 மணி நில வரப்படி, 15 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், 3 ஆண் குழந்தைகள், 12 பெண் குழந்தைகள். குழந்தைகளின் பெற்றோர், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் என அனை வருக்கும் இனிப்புகள் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், ‘‘குழந்தை செல்வத்தை புத்தாண்டு பரிசாக பெறுவது எல்லா தம்பதியினருக்கும் கிடைக்காது. ஆனால், மதுரை  அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகளுக்கு, மருத்துவமனையின் சார்பில் இனிப்பு கள் வழங்கப்பட்டன. புத்தாண்டு தினத்தில் பணி புரிந்து, குழந்தைகளுக்கு பிரசவம் பார்த்தது எங்களுக்கும் புதுவித அனுபவத்தை தரக்கூடியதாகும்’’ என்றனர்.

கனமழை எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடி, ஜன.2- தூத்துக்குடி மாவட் டத்தில் கனமழை பெய்யும் என்றும் வங்கக் கடலில் மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் காற்றின்  வேகம் 50 கிலோமீட்டர் வரை  வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. இதையடுத்து தூத்துக் குடி மாவட்ட மீன்வளத் துறை சார்பில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீன வர்கள் மறு அறிவிப்பு வரும்  வரை  கடலுக்கு மீன் பிடிக்கச்  செல்ல வேண்டாம் என அறி வுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து செவ் வாய்க்கிழமை 4-வது நாளாக  தூத்துக்குடியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரக்கணக்கான நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

வைகையில் தண்ணீர் திறப்பு குறைப்பு:  ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

தேனி, ஜன.2 வைகை அணையில் இருந்து கடந்த ஒரு மாதமாக  ஆற்றில் திறக்கப்பட்ட தண்  ணீர் திங்கட்கிழமை காலை  நிறுத்தப்பட்டு, நீர் வெளி யேற்றம் வினாடிக்கு 1,400  கன அடியாக குறைக்கப்பட் டது. வைகை கடந்த 2023ம் ஆண்டில் 2 முறை நிரம்பி யது. கடந்த நவம்பர் மாத  இறுதியில் நீர்மட்டம் 70  அடியை எட்டியது. இதனை யடுத்து கடந்த ஒரு மாதத்திற்  கும் மேலாக வைகை அணை யில் இருந்து இராமநாத புரம், சிவகங்கை, மதுரை  மாவட்ட தண்ணீர் தேவைக் காக ஆற்றுப்படுகை வழி யாக 6 கட்டங்களாக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த  10 நாட்களாக விருதுநகர்  மாவட்ட குடிநீர் தேவைக்  காகவும் வைகை அணை யில் இருந்து தண்ணீர் திறக்  கப்பட்டது. இது தவிர பாச னக் கால்வாய் வழியாகவும்  தண்ணீர் வெளியேற்றப்பட் டது.  வைகை அணையின் மொத்த நீர் இருப்பு 6 டி.எம்.சி யில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 டி.எம்.சி தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள் ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அணைக்கு போது மான நீர்வரத்து இருந்ததால்,  வைகை அணை நீர்மட்டம் குறையவே இல்லை. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆற்றில் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.  வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினா டிக்கு 2 ஆயிரத்து 400 கன  அடியில் இருந்து, 1, 400 கன  அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. வைகை அணை யில் இருந்து தற்போது பாச னத்திற்கு மற்றும் குடிநீர் தேவைக்காக மட்டும் தண்  ணீர் திறக்கப்பட்டு வருகி றது.  71 அடி உயரம் கொண்ட  வைகை அணையின் நீர்மட் டம் தற்போதும் 69 அடியாக உள்ளதால், இந்த ஆண்டு கோடையில் வைகை அணையை நீர் ஆதாரமாக கொண்டுள்ள பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்  பட வாய்ப்பு இல்லை என்று  பொதுப்பணித்துறை அதி காரிகள் தெரிவித்தனர். முல்லைப்பெரியாறு முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 138.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 849  கன அடியாகவும், திறப்பு 1867 கன அடியாக இருந்தது.  மஞ்சளாறு அணையின் நீர்  மட்டம் 56.40 அடி அணைக்கு  நீர்வரத்து 68 கன அடி.  திறப்பு 80 கன அடி. சோத்  துப்பாறை அணையின் நீர்  மட்டம் 126.28 அடியாக இருந்  தது. அணைக்கு வரும் 45.96 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

புதிய வகை கொரோனா தொற்று பரவல் ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார்

மதுரை, ஜன.2- சில நாள்களுக்கு முன்பு கோவையில் இளம்பெண் ஒருவருக்கு ஜே.என்.1. புதிய வகை கொரோனா தொற்று  பாதிப்பு கண்டறியப்பட்டது.  இந்நிலையில் மதுரை மற்றும்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுவரை புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்ட றியப்படவில்லை.  ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதிய வகை  கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அந்த நோயா ளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு தனிப்பிரிவு தயார் நிலையில் உள்ளது.  இதில் 25 படுக்கைகள், 4 தீவிரச் சிகிச்சை வசதி கொண்ட  படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரி வில் நோயாளிகளுக்கு தேவையான அதிநவீன மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.

கேரள ரப்பர் தொழிற்சாலை டிசம்பரில் தொடக்கம்
இரண்டாம் கட்டமாக டயர் பவுடர் பிரிவு

கோட்டயம், ஜன.2- ரப்பர் துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய கேரள ரப்பர் லிமிடெட் (கேஆர்எல்) வேலூரில் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் டிசம்பரில் நிறைவடையும். நிர்வாகத் தொகுதி கள், ரப்பர் பயிற்சி மையம், ரப்பர் ஆராய்ச்சி  மற்றும் மேம்பாட்டு மையம் , ரப்பர் பொருட்கள்  கண்காட்சி மையம் ஆகியவற்றை உள்ள டக்கிய முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.  2 ஆம் கட்டமாக டயர் பவுடர் பிரிவு துவக்கப்பட உள்ளது. கோட்டயம் மாவட்டம் வேலூரில் உள்ள கேரளா பேப்பர் புராடக்ட்ஸ் லிமிடெட் வழங்கிய  164 ஏக்கரில் கேஆர்எல் நிறுவனத்தை உரு வாக்க மாநில அரசு முயற்சி எடுத்துள்ளது. சதுப்பு நிலப்பகுதியில் மண் அள்ளுதல் மற்றும்  சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 110  கேவி துணை மின் நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ.192 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்  மதிப்பீட்டில் கேஆர்எல் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. புதிய ரப்பர் சார்ந்த ஸ்டார்ட்அப்களை அமைக்க 130 ஏக்கர் நிலம் மற்றும் உள்கட்ட மைப்புகளை கேஆர்எல் வழங்கும். இரண்டாம்  கட்டமாக டயர் பவுடர் யூனிட் நிறுவப்படும். சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பழைய டயர்களை பிளாக் ரப்பராக அரைக்கும் அலகு இது. கேரளாவில் இதுவே முதல் முறை. இந்த  பிளாக் ரப்பரைப் பயன்படுத்தி மற்ற பொருட் களைத் தயாரிக்கலாம். இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் காலாவதியான டயர்கள் அழிக்கப்படுகின்றன. 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இதுகுறித்து நிறுவனத்தின் பொது மேலா ளர் கே.ஜே.ஜோஸ் கூறுகையில், இயற்கை ரப்பர் தொழிலை அடிப்படையாக கொண்டு தொழிற்சாலைகளை நிறுவி, ரப்பர் நுகர்வை அதிகரித்து, அதன் மூலம் ரப்பர் விலையை உயர்த்துவதை, கே.ஆர்.எல்., நோக்கமாக கொண்டுள்ளது. ஐந்தாயிரம் பேருக்கு நேரடி யாகவும், பத்தாயிரம் பேருக்கு மறைமுகமாக வும் வேலை வாய்ப்பு அளிக்கும் மாபெரும் தொழில் முயற்சி வேலூரில் தயாராகி வருகிறது  என்றார்.