மக்களவை பொதுத் தேர்தலில் கரூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேல் ஞாயிறன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது புகளூர் வட்டாட்சியர் தனசேகர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.