தஞ்சாவூர், ஜன.15 - கலை மாமணி வி.கிருஷ்ண சாமி (86) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜன.13 அன்று காலமானார். இவருக்கு மனைவி கோகிலா, மகன் கே.தில்லையராமன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பி. கலைச்செல்வி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். 50 ஆண்டு களுக்கும் மேலாக, இயல், இசை, நாடகத்துறையில் பணியாற்றி வந்த வி.கிருஷ்ணசாமிக்கு, ‘சிறந்த தெருக்கூத்து நடிகர்’ என்ற பிரிவில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. அன்னாரது, இறுதி நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் ஆர்.சுத்திப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, சிபிஎம் பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.காந்தி, இந்திய மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.