districts

img

திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு: 46 பேர் காயம்

காளை முட்டியதில் விவசாயி பலி

இப்போட்டியில் பங்கேற்பதற்காக கந்தர்வகோட்டை மஞ்சபேட்டையைச் சேர்ந்த விவசாயி பவுன்ராஜ் (49), தனது உறவினரின் காளையை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை மதியம் ஜல்லிக்கட்டு நடைபெறும் நுழைவாயில் முன்பு, பவுன்ராஜ் காளையுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மற்றொரு காளை பவுன்ராஜ் வயிற்றில் குத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பவுன்ராஜ் உயி ரிழந்தார். இதுகுறித்து வல்லம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


தஞ்சாவூர், ஜன.29- தஞ்சாவூர் அருகேயுள்ள திருக்கா னூர்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 46 பேர் காயமடைந்தனர். திருக்கானூர்பட்டி மாதா கோயில் தெருவில் புனித அந்தோணியார் பொங்கலையொட்டி நடைபெற்ற இந்த  ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட  ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடிய சைத்து துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்க ளிலிருந்து வந்த 653 காளைகள் ஒவ் வொன்றாகத் திறந்து விடப்பட்டன. இவற்றைப் பிடிக்க மொத்தம் 310 வீரர்கள் களமிறங்கினர். இவர்களில் சுழற்சி முறையில் 50 பேர் வீதம் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதில், வெற்றி பெற்ற வீரர்களுக் கும், வென்ற மாட்டின் உரிமையாளர் களுக்கும் சில்வர் பாத்திரங்கள், கட்டில்,  பீரோ, சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசு கள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் காளைகள் முட்டி யதில் மாடு பிடி வீரர்கள், வேடிக்கைப் பார்த்தவர்கள், மாட்டைப் பிடித்து சென்றவர்கள் என 46 பேர் காய மடைந்தனர். இவர்களில் பலத்தக் காய மடைந்த 20 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறந்த காளைகள்,  வீரர்களுக்கு பைக் பரிசு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி  வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட திருக் கானூர்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த ராகுலுக்கு முதல் பரிசும், பிலிப்ஸ் அடைக்கலராஜூக்கு 2 ஆம்  பரிசும், சிறந்த ஜல்லிக்கட்டு காளையாக தேர்வு செய்யப்பட்ட விருதுநகர் மாவட்டம் வத்திராக்கோட்டையைச் சேர்ந்த வினோத் காளைக்கு முதல் பரிசும், வல்லம் டேவிட் காளைக்கு 2  ஆம் பரிசும் வழங்கப்பட்டன. இவர் களுக்கு பரிசாக மோட்டார் சைக்கிள் கள் வழங்கப்பட்டன.   விழாவில் மாவட்ட வருவாய் அலு வலர் தெ.தியாகராஜன், கோட்டாட்சி யர் செ.இலக்கியா, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வி.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தாண்டு  நடந்த முதல் போட்டி இது என்பது குறிப் பிடத்தக்கது.