districts

திருச்சி முக்கிய செய்திகள்

கலைஞர் கனவு இல்லம்: வீடு கட்ட ஆணை வழங்கல்

பாபநாசம், ஆக.27 - கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான பணி  ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் பி.டி.ஓ அலுவ லகத்தில் நடந்த நிகழ்ச்சி யில், பிடிஓ சிவக்குமார் வரவேற்றார். 110 பயனா ளிகளுக்கு பணி ஆணையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவா ஹிருல்லா வழங்கினார். பாபநாசம் ஊராட்சி ஒன்றி யத் தலைவி சுமதி, மாவட்டக் கவுன்சிலர் தாமரைச்செல்வன், ஒன்றியக் கவுன்சிலர்கள், ராஜகிரி ஊராட்சித் தலை வர் சமீமா பர்வீன்  உட்பட  பலர் பங்கேற்றனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) விஜயகுமார் நன்றி கூறி னார்.     

காண்டாமிருக கொம்பு விற்பனை:  5 பேர் கைது

கும்பகோணம், ஆக.27- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநா கேஸ்வரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் காண்டாமிருக கொம்பு விற்பனை செய்ய உள்ள தாக TNWCCB சென்னை மற்றும் ராமநாதபுரம் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து. கும்பகோணம் வனச்சரக அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான வனத் துறையினர் அங்கு அதி ரடியாக ஆய்வு செய்த னர். அப்போது காண்டா மிருக கொம்பு விற்பனை யில் ஈடுபட்ட நாகப்பட்டி னத்தைச் சேர்ந்த கலிய பெருமாள் (30), திருவா ரூரைச் சேர்ந்த ஹாஜ மைதின் (76), கும்பகோ ணம் பகுதிகளைச் சேர்ந்த  செந்தில் (45), தென்னரசு (47), விஜயகுமார் (51)  ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தின்ர. அதில், அவர்கள் காண் டாமிருக கொம்பு விற்ப னையில் ஈடுபட்டதை ஒப்பு கொண்டதை அடுத்து, அனைவர் மீதும்  குற்ற வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத் தனர். 

சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

அறந்தாங்கி,  ஆக.27 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் சிலட்டூரில், முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.12.51 லட்சம் மதிப்பீட்டில், சிலட் டூர்-தண்டாங்கரை சாலை அமைப்பதற்கான பணிகளை தமிழக சுற்றுச் சூழல் துறை மற்றும் கால நிலை மாற்றுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத் தார். நிகழ்ச்சியில் அறந் தாங்கி ஒன்றிய பெருந்த லைவர் மகேஸ்வரி சண்முகநாதன், சிலட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராணி ராஜா மற்றும் அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக் குமார், அறந்தாங்கி வட்டாட்சியர் திருநாவுக் கரசு மற்றும் அரசு அதி காரிகள், உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொண்ட னர்.

சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெறுக!

மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை

பாபநாசம் ஆக.27 - சுங்க கட்டண உயர்வை  திரும்பப் பெற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாபநாசம்  எம்.எல்.ஏவுமான ஜவா ஹிருல்லா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 28 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1  ஆம் தேதி முதல், 5 சதவீதம்  முதல் 7 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப் பட இருக்கிறது. இந்தியாவிலேயே மிக அதிகமான சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் இருப்ப தாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச் சாவடிகளில் எவ்வ ளவு கட்டணம் வசூல் செய்யப் பட்டிருக்கிறது. அதன் வாயி லாகச் செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற  புள்ளி விவரங்கள் இது வரை வெளிப்படைத் தன்மை யோடு அறிவிக்கப்பட வில்லை.  இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண் டும் என்று மனிதநேய மக்கள் கட்சி பலமுறை கோ ரிக்கை வைத்துள்ளது.‘ ஃபாஸ்ட் டாக்’ என்ற பெய ரில் வசூலிக்கப்படும் முன் தொகை வாயிலாகப் பெரு மளவிலான பொருளா தாரம் வாகன உரிமையாளர் களிடமிருந்து சுரண்டப்படு கிறது. கடந்த ஜூன் மாதம் தமிழ் நாட்டில் 25 சுங்கச் சாவடி களில் கட்டணம் உயர்த்தப் பட்ட நிலையில், தற்போது 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்தக் கட்டண உயர்வின் வாயிலாகப் பேருந்து கட்டண உயர்வு  மற்றும் வாடகை வாகனங்க ளின் கட்டணம் உயர்த்தப்படு வதோடு, விலைவாசிகளின் உயர்வும் தவிர்க்க முடியாத தாக ஆகிவிடும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரந்தூர் சுங்கச் சாவடியில் கூடுதலாக ரூ.28  கோடி வசூல் செய்தது என  இந்தியத் தலைமை கணக் காயர் அறிக்கை அளித்தது கவனிக்கத்தக்கது. ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் என்.எச்.ஏ.ஐ எனும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உடனடியாக சுங்க கட்டண உயர்வினைத் திரும்பப் பெற வேண்டும்.  இல்லையென்றால் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் சுங்கச் சாவடிகளை முற்றுகையிடும் போராட் டத்தை அறிவிக்க நேரிடும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆக.31 திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம்

 திருச்சிராப்பள்ளி, ஆக.27 - தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்திய டைந்த, குறைந்தபட்சம் 8 ஆவது முதல் பட்டப்படிப்பு முடித்த  இளைஞர்களுக்கு (ஆண்/பெண் இருபாலரும்) அவரவர்க ளின் தகுதிக்கேற்ப, தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளித்திட ஆக.31 (சனிக்கிழமை) அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திருச்சிராப் பள்ளி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் நடைபெறவுள்ள இம்முகாமில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்க வுள்ளன. திருச்சி மாவட்டம் மற்றும் இதரப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற, தன்விபரம் (பயோடேட்டா), கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, புகைப்படம் மற்றும் இதர சான்றிதழ்களின் நகலுடன் நேரில் வர வேண்டும்.  மேலும் இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட  இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கம், மாவட்ட ஆட்சியரகம், திருச்சிராப்பள்ளி என்ற  முகவரியில் நேரிலோ அல்லது 0431-2412726 என்ற தொலை பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு முகாம்  குறித்த தகவல்களைப் பெறலாம் என திருச்சி மாவட்ட ஆட்சி யர்  பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

மக்களுடன் முதல்வர் முகாம்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ பங்கேற்பு

பாபநாசம், ஆக.27 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சாலிய மங்கலத்தை அடுத்த கீழகோயில்பத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.  பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பங்கேற்று முகா மைத் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச் செல்வம், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச் செல்வன், மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு தியாகராஜன், பாபநாசம் தாசில்தார் செந்தில்குமார், அம்மாப் பேட்டை பிடிஓக்கள் ராஜன், நவரோஜா உட்பட ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.  இதில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, மது விலக்கு, கூட்டுறவு, பிற்பட்டோர் நலம், மின்சாரம், வீட்டு வசதி மற்றும்  நகர்ப்புற வளர்ச்சி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள், மாற்றுத் திறனாளிகள் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பங்கேற்றன. நெய் குன்னம், மகி மாலை, நெடுவாசல், கீழக்கோயில் பத்து, உக்கடை உள்ளிட்ட  ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் கோரிக்கை  தொடர்பான மனுக்களை அளித்தனர். இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிக்கான காசோலை வழங்கப்பட்டது.

இளம்பெண் கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கில் அண்ணன் – தம்பி கைது

தஞ்சாவூர், ஆக.27 - தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த  23 வயது இளம்பெண்ணை, கடந்த ஆக. 12 அன்று, அதே  பகுதியை சேர்ந்த கவிதாசன் (25), அவரது நண்பர்கள் திவா கர் (27), பிரவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய  நான்கு பேரும் சேர்ந்து கும்பல் பாலியல் வல்லுறவு செய்தனர்.  இது தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில்,  ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்  பதிந்து, கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.  இந்நிலையில், பாலியல் வல்லுறவு விவகாரத்தில், பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (20) மற்றும்  வேல்முருகனின் 17 வயது நிரம்பிய தம்பி இருவருக்கும் தொடர்பு இருந்த நிலையில், காவல்துறையினர் இருவரை யும் கைது செய்யாமல் இருந்தனர்.  இதையடுத்து வேல்முருகன், அவரது தம்பி இருவரை யும் கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  மாதர் சங்கம், வாலிபர் சங்கம், கிராம மக்கள், வணிகர் கள், பல்வேறு அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பி னரும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதற்கிடையில், சம்பவம் நடந்த ஆக.12 அன்று, ஏற்கனவே கைது செய்யப்பட்ட கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவனுடன், வேல்முருகன் அவ ரது தம்பி சேர்ந்து டூவீலரில் வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியன. இதன் அடிப்படையில், ஒரத்தநாடு அனைத்து மகளிர்  காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு வேல்முருகன் மற்றும் அவரது தம்பி இருவரையும் கைது செய்து, வேல் முருகனை திருச்சி மத்திய சிறையிலும், அவரது 17 வயது  தம்பியை தஞ்சாவூர் சிறார் இல்லத்திலும் அடைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “இளம் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த இடத்தில், வேல்முருகன் அவரது தம்பி இருவரும் நின்று கொண்டு,  அப்பகுதியில் வேறு யாரும் வருகிறார்களா என கண்கா ணித்துக் கொண்டிருந்துள்ளனர். அத்துடன் நடந்த குற்றத்தை மறைக்கும் விதமாக, குற்றத்திற்கு உடந்தை யாக வேல்முருகன், அவரது தம்பி செயல்பட்டதால் கைது  செய்துள்ளோம்” என்றனர்.

உவர்நீரில் மீன், இறால் வளர்ப்பிற்கு  மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், ஆக.27 -  பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் (கொடுவாய் மீன் - Sea bass) மீன்  உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் புதிதாக கொடுவாய்  மீன்குளங்கள் அமைத்திட விரும்புவோர் பயன்பெறும் வகையில், புதிய மீன்குளங்கள் அமைக்கவும், அதற்கான  உள்ளீட்டு செலவினங்களுக்கு மானியம் வழங்கிடும் திட்டம் பொதுப் பிரிவினருக்கு 3 ஹெக்டேர் இலக்கு நிர்ண யிக்கப்பட்டு, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புதிய மீன்குளம் ஒரு ஹெக்டேர்  அளவில் அமைத்திட செலவினம் ரூ.8 லட்சம் எனவும், உள்ளீட்டு செலவினம் ரூ.6 லட்சம் எனவும் நிர்ணயித்து அதனில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.5.60 லட்சம் வழங்கப்பட உள்ளது. பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021- 2022-இன்கீழ் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய  குளங்கள் கட்டுதல் மற்றும் உள்ளீட்டு செலவினங்களுக் கான மானியம் பொதுப் பிரிவினருக்கு 6 ஹெக்டேர் இலக்கு  நிர்ணயம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பதிய இறால்  வளர்ப்பு குளம் அமைப்பதற்கும் மற்றும் உள்ளீட்டு செல வினத்திற்கான மொத்த செலவினம் ரூ.14 லட்சத்தில், 40  சதவீதம் மானியமாக ரூ.5.60 லட்சம் வழங்கப்படும். மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில், முன்னு ரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.  விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயி கள் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,  தஞ்சாவூர், எண்:873/4, அறிஞர் அண்ணாசாலை, கீழவா சல் அலுவலக முகவரியில் நேரிலோ அல்லது 04362-235389  என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, 25.9. 2024-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

வாரந்தோறும் குழந்தைகள் பாதுகாப்பு  கூட்டம் நடத்த ஆட்சியர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர், ஆக.27 -  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு,  குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  பா.பிரியங்கா பங்கஜம், தலைமையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம், குழந்தைகள் கல்வியில் இடை நிற்றல் ஆகியவற்றை தடுப்பது குறித்து காவல்துறை, சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட  அலகு, மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் போன்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர் களுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு மேற்கொண்டார். மேலும், வட்டாரம் மற்றும் ஊராட்சி அளவில் தன்னார் வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் திட்டப் பணியாளர்கள், வருவாய்த் துறை போன்ற பல்வேறு அமைப்புகள் வாரந்தோறும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.  இச்செயல் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு பேணிக் காக்கப்படும். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு தொடர் பான புகார்கள் குறித்து 1098 என்ற இலவச உதவி எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மருத்துவ மேற்படிப்பு சீட் வாங்கித் தருவதாக  ரூ.20 லட்சம் மோசடி: முன்னாள் பேராசிரியை கைது

நாகர்கோவில்,ஆக.27 நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியை  சேர்ந்தவர் ஆனந்த கென்னடி. தொழிலதிபர். இவரது மகள் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு நாகர் கோவிலில் ஒரு மருத்துவமனையில் டாக்டராக  பணியாற்றி வந்தார். இவர் மருத்துவ மேற்படிப் பிற்காக முயற்சி செய்தபோது நாகர்கோவில் தம்பத்துகோணம் பகுதியைசேர்ந்த முன்னாள் பேராசிரியை ஜான்சி என்பவர் ஆனந்த் கென்னடியை தொடர்பு கொண்டுள்ளார். மருத்துவ மேற்படிப்புக்கு சீட்டு வாங்கி தருவ தாகவும் இதற்கு 23 லட்சம் செலவு ஆகும் என்றும் கூறியுள்ளார். இதன்படி23 லட்சம்  ரூபாயை ஆனந்த கொன்னடி கொடுத்துள்ளார்.  கல்லூரியில் சேர்வதற்கான உத்தரவுகளை ஜான்சி வழங்கி உள்ளார். ஆனால், அதை கொண்டு சென்ற போது அவை போலியானது என்று தெரிய வந்தது. இது குறித்து ஆனந்த கென்னடி ஜான்சியிடம் கேட்டபோது,இந்த முறை சீட் கிடைக்கவில்லை. அடுத்தமுறை கண்டிப்பாக வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால், ஆனந்த கென்னடி பணத்தை திரும்ப கேட்ட பொழுது பணத்தை கொடுக் காமல் இழுத்தடிப்பு செய்தார். இதன் பின்னர் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு 20 லட்ச ரூபாயை கொடுக்காமல் இழுத்தடித் தாராம். இது குறித்து ஆனந்த கென்னடி மாவட்ட எஸ்.பி சுந்தரவதனத்திடம் அளித்த புகாரின் பேரில் எஸ்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் விசா ரணை நடத்தி ஜான்சி மற்றும் கடலூரைச் சேர்ந்த டாக்டர் ஜானகிராமன் மற்றும் அவரது  தந்தை அண்ணாமலை ஆகிய மூன்று பேர் மீது  வழக்கு பதிவு செய்தனர். இதில் ஜான்சியை கைது செய்து தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி  வருகின்றனர்.

புகையிலைப் பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

தஞ்சாவூர், ஆக.27 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  விற்பனை செய்ததை கண்டறிந்த உணவுப் பாதுகாப்பு துறையினர் அவற்றை பறிமுதல் செய்து கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.  தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பேராவூரணியில், பட்டுக் கோட்டை சாலையில் உள்ள இரு கடைகளில்  உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முரு கன், மேற்பார்வையாளர்கள் அடைக்கலம், சுரேஷ், ஜான்சன் ஆகியோர் சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.  மேலும், கடைகளை 15 நாட்கள் தற்காலி கமாகப் பூட்டி சீல் வைத்தனர். மேலும், இரு  கடைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம்  மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்: 70 பேருக்கு அடையாள அட்டை வழங்கல்

தஞ்சாவூர், ஆக.27 -  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை யில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மதிப்பீட்டு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், மருத்துவர்கள் கலைச் செல்வன் (எலும்பு மூட்டு), மங்கையர்க்கரசி (மனநலன்), அறிவழகன் (கண்), சீனி வாசன் (குழந்தைகள்), கார்த்திகேயன் (காது,  மூக்கு, தொண்டை) ஆகியோர் மாற்றுத்திற னாளிகளை பரிசோதனை செய்ததன் அடிப் படையில், 70 பேருக்கு அடையாள அட்டை  வழங்கப்பட்டது. தனித்துவம் வாய்ந்த அடை யாள அட்டைக்கும் பதிவு மேற்கொள்ளப் பட்டது.  இதில், தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் மேனகா, நிர்வா கிகள் உதவிகளை செய்தனர். முகாமுக்கான  ஏற்பாடுகளை மகளிர் திட்ட வட்டார ஒருங்கி ணைப்பாளர் மல்லிகா செய்திருந்தார். இதில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள், அவர்களது உறவினர்கள் கலந்து  கொண்டனர்.

அண்ணாமலை பல்கலை.யில் தேர்வு முறைகளை நடைமுறைப்படுத்துக! பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை

மயிலாடுதுறை, ஆக.27 - பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் முனைவர் பேரா.சேவி யர் செல்வக்குமார், அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு நெறியாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள தாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழ கத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கான பருவத்தேர்வு கடந்த ஏப்ரல்-மே 2024 இல் நடைபெற்றது. இளநிலை (UG) மற்றும் முது நிலை (PG) மாணவர்கள், தாங்கள் எழுதிய  இறுதிப் பருவத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில்  தோல்வியடைந்திருந்தால், அவர்களுக்கு ஆக.31 அன்று உடனடி தேர்வு நடத்தப்பட வுள்ளது.  பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலோ, இறுதியாண்டு தேர்வு எழுதிய மாண வர்களுக்கு எந்தவொரு பருவத்திலும் ஏதே னும் ஒரு பாடத்தில் தோல்வியடைந்திருந்தா லும் உடனடித் தேர்வை எழுதலாம் என வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே பாரதி தாசன் பல்கலைக்கழகத்தை போன்றே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மேற்படிப்பு தொடர வாய்ப்புகளை வழங்கும்  படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முனைவர் சேவியர் செல்வ குமார் குறிப்பிட்டுள்ளார்.