districts

யானை தாக்கி ஒருவர் பலி

கோவை, செப். 13-  காட்டு யானை தாக்கி கோவையில் ஒருவர் பலியான சம்ப வம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பேரூர், மருதமலை, தொண்டாமுத்தூர், நரசிபுரம், கெம்ப னூர், காளையனூர், தடாகம் போன்ற மேற்கு மலைத் தொடர்ச்சியொட்டிய பகுதிகள் உள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து, உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் வருகின் றது. இவைகள் வீடுகளையும் சேதப்படுத்தி, மனிதர்களையும் தாக்கி வருகிறது.  இந்நிலையில், கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல் ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் தேவ ராஜ். தினக்கூலி வேலைக்கு செல்லும் இவருக்கு மனைவி துளசி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் வெள்ளி யன்று அதிகாலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகில் உள்ள புளியந்தோப்புக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஒற்றைக் காட்டு யானை தாக்கி யது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அங்கு வந்த கோவை சரக வனத்துறை மற்றும் தொண்டா முத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை மேற்கொண்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சித்தபோது, அப்பகுதி பொதுமக்கள் தடுத்தனர்.  மேலும் தங்களுக்கு அடிப்படை வசதிகயான கழிவறை வசதி உடனடியாக செய்து தர வேண்டும். மேலும், தொடர்ந்து நடைபெறும் மனித விலங்கு மோதலுக்கு நிரந்திர தீர்வு காண வேண்டும் என தொண்டாமுத்தூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.