விவசாயிகளுக்குப் பயிற்சி
பாபநாசம், செப்.17 - பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வீரமாங்குடியில் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் முகமது பாரூக் பயிற்சியை தொடங்கி வைத்ததுடன், இயற்கை வேளாண் மையின் நன்மைகள், சவால்கள், பஞ்ச கவ்யம், பூச்சி விரட்டி தயாரிப்பு, பயன்பாடு குறித்துப் பேசினார். பாபநாசம் வட்டார விதைச் சான்று அலுவலர் செல்வ மணி, பாரம்பரிய நெல் சாகுபடி உத்தரவாத பங்கேற்பு உறுதியளிப்பு திட்ட செயல்பாடு குறித்து பேசினார். வேளாண்மை அலுவலர் நடராஜன் உயிரியல் கார ணிகளின் பயன்பாடு குறித்துப் பேசினார். முன்னோடி விவ சாயிகள் தங்களது வேளாண் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். வேளாண்மை உதவி அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.
மாணவிகளுக்கு போட்டிகள்
பாபநாசம், செப்.17 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர்.டி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறைச் சார்பில் அனைத் துத் துறை மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, நாடகம் போட்டிகள் நடந்தன. கல்லூரி ஆங்கிலத் துறை தலை வர் மணிமொழி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக காவ்யா பிருந்தா, உமா மகேஸ்வரன் பங்கேற்று பேசினர். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். பேரா சிரியர் நாராயணசாமி நன்றி கூறினார்.
மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்த மீனவர் பலி
தஞ்சாவூர், செப்.17 - தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறை முகத்திலிருந்து கண்ணாடியிழை படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து பலியானார். மல்லிப்பட்டினம் முத்துவாப்பா என்பவருக்கு சொந்த மான கண்ணாடியிழை படகில் மல்லிப்பட்டினம் பழனி வேல் (48), விஜய் (28), அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் அரவிந்த் (22) ஆகிய மூன்று பேரும் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சுமார் நான்கு பாகம் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டி ருந்த போது, எதிர்பாராதவிதமாக திடீரென கடலில் சூறைக் காற்று வீசியது. இதில், படகின் என்ஜின் அருகே நின்று கொண்டிருந்த அரவிந்த், விஜய் இருவரும் தவறி கடலுக்குள் விழுந்த னர். அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகில் உள்ள மீனவர்கள் விரைந்து வந்து கடலுக்குள் இருந்து விஜய்யை மட்டும் மீட்டனர். அரவிந்தை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை புதுப்பட்டி னம் கடல் பகுதியில் அரவிந்த் சடலம் கண்டு பிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு உடற்கூறாய் வுக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த அரவிந்துக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல் குழுமத்தில் புகார் செய்ததின்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளத்தூர் கிராம விவசாயிகளுக்குப் பயிற்சி
தஞ்சாவூர், செப்.17 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம், பள்ளத்தூர் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்காக, 20 ஹெக்டேர் பரப்பளவிற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, விவசாயிகளை ஒருங்கிணைத்து குழுவாக ஏற்படுத்தி, குழுவின் பதிவு அதன் செயல் பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு, சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண் மை உதவி இயக்குநர் ஜி.சாந்தி தலைமை வகித்தார். பேரா வூரணி விதைச்சான்று அலுவலர் வெங்கடாசலம் பேசுகை யில், “இத்திட்டத்தில் பாரம்பரிய முறையில் பயிர் சாகுபடி செய்திடவும், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்ற ளிப்புத் துறை மூலமாக பதிவு செய்யும் முறை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து மண் மற்றும் நீர் ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டு, அங்கக சத்துகள் மற்றும் ரசா யன பூச்சிக்கொல்லி கழிவுகள் இருப்பதை அறிந்து சாகு படி செய்வதையும், இதற்கான பதிவேடுகள் பராமரிப்புத் தொடர்பாகவும், பஞ்சகாவ்யா, மீன் அமிலம், ஜீவா மிர்தம் மற்றும் ஏழு வகை புண்ணாக்குகள், இயற்கை பூச்சி விரட்டிகள் தயாரித்து பயன்படுத்துவது குறித்தும்” எடுத்துக் கூறினார்.
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அறந்தாங்கி, செப்.17 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறி யாளர் ஆர்.எம்.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், அறந்தாங்கி அலுவலகத்தில் 19.9.2024 (வியாழக் கிழமை) காலை 10:30 மணியளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடத்தப்பட உள்ளது. அது சமயம் மின் நுகர்வோர்கள் தங்கள் குறை களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மாதம் ரூ.9000 ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
கும்பகோணம், செப்.17- தஞ்சை மாவட்ட இபிஎஸ் ஓய்வூதியம் பெறுவோர் நலச் சங்கத்தின் சிறப்பு பேரவை சொக்கலிங்கம் தலைமை யில் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் நடை பெற்றது. பேரவையில் சங்கத்தின் மாநில துணைத் தலை வர் எ.இராமையன், சோழமண்டல தலைவர், மாநில துணைச் செயலாளர் மாணிக்கம் மற்றும் மாவட்ட செய லாளர் வாசுதேவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேரவையில் ஒன்றிய பாஜக அரசு இபிஎஸ் ஓய்வூதி யம் பெறுபவருக்கு ரூ. 9 ஆயிரம் மாதாந்திர பென்சன் வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீடு, பஞ்சப்படி உயர்வை அமலாக்கிட வேண்டும். வயது முதிர்ந்த மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டண சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாட்டிறைச்சி பிரியாணி வழங்க முயன்ற 44 பேர் கைது
கரூர், செப்.17 - கரூரில் மாட்டிறைச்சி பிரியாணி பொது மக்களுக்கு வழங்க முயன்றதாக சாமானிய மக்கள் நலக் கட்சியினர் 44 பேரை கரூர் போலீ சார் கைது செய்தனர். கரூரில் சாமானிய மக்கள் நலக்கட்சி, களம் அமைப்பினர் சார்பில் தந்தை பெரியா ரின் 146 ஆவது பிறந்த தின விழா கரூர் லைட் ஹெவுஸ் கார்னர் பகுதியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கட்சி யின் மாநில நிர்வாகி வழக்குரைஞர் குணசேக ரன், மக்கள் இயக்க கழக மாவட்டத் தலை வர் அரசப்பன் உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதனிடையே பொது இடத்தில் மாட்டுக் கறி உணவு பரிமாறக் கூடாது என ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த தாக கூறி, மாட்டிறைச்சி உணவு பொட்டலங் களை சாமானிய மக்கள் நலக்கட்சி, களம் அமைப்பினர் பொதுமக்களுக்கு வழங்க முயன்றதால், அவர்களை கரூர் நகர போலீ சார் கைது செய்தனர். மொத்தம் 7 பெண்கள் உள்பட 44 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
திருச்சியில் செப்.27 முதல் அக்.6 வரை புத்தகத் திருவிழா
திருச்சிராப்பள்ளி, செப்.17 - திருச்சி புத்தகத் திருவிழா செப்டம்பர் 27 முதல் அக்.6 ஆம் தேதி வரை திருச்சி ராப்பள்ளி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மை தானத்தில் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கணக் கான புத்தக அரங்குகள் மற்றும் சிறார் அரங்கம் இடம்பெற உள்ளன. ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு உரைகளுடன், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. புத்தகத் திருவிழாவினையொட்டி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் வண்ணம் கட்டுரைப் போட்டி, பொது நூலகத் துறை மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பாக நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது சொந்த அனுபவத்தை “என்னை மேம்படுத்திய வாசிப்பு” என்ற தலைப்பில் நான்கு பக்கங் களுக்கு மிகாமல் கட்டுரை எழுதி, தாங்கள் வசிக்கும் ஊருக்கு அருகாமையில் உள்ள பொது நூலகத்துறை நூலகங்களில் தங்க ளது கட்டுரைகளை 22.9.2024-க்குள் ஒப்ப டைக்க வேண்டும். பொது மக்களால் ஒப்படைக்கப்படும் கட்டுரைகள் சம்பந்தப்பட்ட நூலகரால், அந்தந்த தாலுகா மைய நூலகரிடம் ஒப்படைக்கப்படும். அவ்வாறு தாலுகா மைய நூலகத்தில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரை களில், தாலுகா அளவில் அமைக்கப்படும் தேர்வுக் குழுவினரால் மூன்று சிறந்த கட்டு ரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்ட மைய நூலகத்தில் ஒப்படைக்கப்படும். தாலுகா அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று கட்டுரைகள் மாவட்ட மைய நூல கத்தில் அமைக்கப்படும் தேர்வுக்குழு மூலம் நேர்காணல் நடத்தி, முதல் மூன்று சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் கட்டுரைகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000 2 ஆம் பரிசாக ரூ.5,000, 3 ஆம் பரிசாக ரூ.3,000 மற்றும் சான்றிதழ்கள் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளன்று வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
கன்று வீச்சு நோய் தடுப்பூசிப் பணி: திருச்சியில் அக்.15 வரை நடக்கிறது
திருச்சிராப்பள்ளி, செப்.17 - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய வெக்கை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் மூலம் புதன்கிழமை முதல் (செப்.18 முதல் அக்.15) வரை தொடர்ந்து 27 நாட் களுக்கு 4 ஆவது சுற்று கன்று வீச்சு நோய் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இத்தடுப்பூசி 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையுள்ள கிடேரி கன்றுகளுக்கு மேற் கொள்ளப்பட உள்ளது. இத்தடுப்பூசிப் பணியின்போது 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையுள்ள கிடேரி கன்றுகள் கண்டறியப் பட்டு, அவைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு, காது வில்லைகள் பொருத்தப்பட்டு, இந்தப் பணி மேற்கொள்ளப் படும். தடுப்பூசிப் போடப்படும் கிராமங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலமாக முன்னறிவிப்பு செய்யப்படும். கிடேரி கன்று வைத்துள்ள விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டு தங்களது கன்றுகளுக்கு ஏற்படும் கன்று வீச்சு நோய், தடுப்பூசியை போட்டுக் கொள்ள அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
சத்துணவு மைய அமைப்பாளர், சமையலர் பணியிட மாறுதல்
மயிலாடுதுறை, செப்.17 - மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்திற் குட்பட்ட திருக்கருக்காவூர் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 13.9.2024 அன்று சத்து ணவு மையத்தில் முட்டை உரித்த சுடு தண்ணீரை ஊற்றும் போது, அப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் சு.சுதர்சன் ஜோஸ்வா என்பவர் மீது பட்டு காயமடைந் தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் கவனக் குறைவாக செயல்பட்ட சத்துணவு மைய சமையலர் ஆர்.சுதா என்ப வரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும், இதனை கண்காணிக்கத் தவறிய பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர் பி.இந்திரா, சமையல் உதவியாளர் ஆர்.பானுமதி ஆகிய இருவரையும் பணியிட மாறுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
வாடகை கட்டிடத்தில் இயங்கிய விடுதி ஆதி திராவிட மாணவர் விடுதிக்கு மாற்றம்
மாவட்ட நிர்வாகம் உத்தரவு விருதுநகர், செப்.17- சிவகாசியில் தனியார் வாடகை கட்டி டத்தில் இயங்கி வந்த ஆதி திராவிடர் மாணவியர் விடுதி, ஆதி திராவிடர் மாண வர் விடுதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அந்த உத்தரவில் கூறியுள்ள தாவது: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி ஓடைப் புறம்போக்கில் கட்டப்பட்டிருந்தது. இத னால் அது இடிக்கப்பட்டு தற்போது வரை வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், பள்ளி மாணவியர் விடுதி யாக இயங்கி வந்த சிவகாசி விடுதியில், மாணவிகள் எண்ணிக்கை குறைந்தது. இத னால் கல்லூரி மாணவியர் விடுதியாக 2023-24 இல் தரம் உயர்த்தப்பட்டது. சிவகாசி கல்லூரி மாணவியர் விடுதி, பானுமதி என்பவரால் வாடகைக் கட்டிடம் பார்க்கப்பட்டு அங்கு விடுதி இயங்கி வந் தது. 2024- 25 ஆம் கல்வியாண்டில் இவ்விடு தியில் 53 மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இத னால், அங்கு போதுமான கழிப்பிட வசதி இல்லை. எனவே, இவ்விடுதியை, மாண வர் விடுதிக் கட்டிடத்திற்கு மாறுதல் செய்திட மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சிவகாசி மாணவர் விடுதிக் கட்டிடத்திற்கு, மாணவிகள் விடுதி யினை மாறுதல் செய்திட ஆணையிடப்படு கிறது. மேலும், சிவகாசி மாணவர் விடுதிக்கு தற்போதுள்ள விடுதியின் அருகிலேயே வேறு வாடகைக் கட்டிடம் தேர்வு செய்து அக்டோபர் முதல் வாரத்திற்குள் மாறுதல் செய்ய விருதுநகர் ஆதிதிராவிடர் நலத் துறைக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் உத்தர விடப்பட்டுள்ளது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம், செப்.17- இராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பாக சாதி ஆண வப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கோரி இ.க.தட் சிணாமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் என். கலையரசன், சிபிஎம் தாலுகா செயலாளர் தி. ராஜா, தமிழ்ப் புலிகள் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆதிவீரன், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி முத்துக்குமார், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.குருவேல், போக்கு வரத்து கழக நிர்வாகி லோக நாதன், சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர்கள் ராஜன், முரு கன், பொன்.ராமச்சந்திரன், ஆர்.முனியசாமி, இளமா றன், முனியசாமி, கிளைச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.
எலுமிச்சை வரத்து குறைந்ததால் கிலோ ரூ.200 ஐ தொட்டது
நாகர்கோவில், செப்.17- குமரி மாவட்டத்தில் எலுமிச்சம் பழம் வரத்து குறைந்ததால் 1 கிலோ , 200 ரூபாயை தொட்டது. சுப காரியங்கள், நோய்களுக்கு, வெயி லின் தாக்கத்தை குறைக்க, கோயில் நிகழ்வு களுக்கு என பல தரப்பு தேவைகளுக்கு மிக முக்கிய பொருளாக எலுமிச்சை விளங்கி வருகிறது. தற்போது பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம், சுப நிகழ்வுகள், கோயில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து அதிகரித் துள்ளதால், அங்கிருந்து குமரி மாவட்டத் திற்கு கொண்டு வரப்படும் எலுமிச்சையின் அளவு குறைந்துவிட்டது. கடந்த மாதங்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை தற்போது வரலாறு காணாத அளவில் ரூ. 200 வரை குமரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது நடுத்தரமாக இருக்கும் எலுமிச்சை பழம் ஒருகிலோவுக்கு 10 எண்ணிக்கை வரை உள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை 200 ரூபாய் என்றால் ஒரு பழம் ரூ.20 வரையில் விற்பனை செய்யப்படு கிறது. பல காய்கறி கடைகள், பழக்கடை களில் எலுமிச்சை பழம் விற்பனை செய்யப் படுவதில்லை. இந்நிலையில், தற்போது குமரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிக மாகவே உள்ளது. அதனால் எலுமிச்சையின் தேவையும் அதிகரித்துள்ளது. சர்பத் உள்ளிட்ட பானங்கள் எலுமிச்சை கொண்டு தயாரிப்பதால் அதன் விலையும் உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.
ஆலங்கோட்டையில் கால்வாயை தடுக்கும் மரத்தின் வேரை அகற்றக் கோரி மனு
நாகர்கோவில், செப்.17- கன்னியாகுமரி மாவட்ட் இராஜாக்கமங்கலம் ஒன்றி யம் ஆலங்கோட்டை பகுதியில் கால்வாயில் நீர் வரத்திற்கு இடையூறாக இருக்கும் மரத்தின் வேரினை அகற்றித் தரக்கோரி அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தினர், குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன் தலைமையில் கொடுக்கப்பட்ட அந்த மனு வில், இராஜாக்கமங்கலம் ஒன்றியம் கணபதிபுரம் பேரூ ராட்சிக்கு உட்பட்ட ஆலன்கோட்டை, புதூர் பகுதியில் செல்லும் இரட்டைக்கரை கால்வாயானது மதகு மூலம் மூஞ்சிறைவிளை மற்றும் அழகன்விளை கால்வாயாக பிரிந்து செல்கிறது. இதில் மூஞ்சிறைவிளை கிளை கால்வாய் அருகில் வளர்ந்து நிற்கும் அரச மரத்தின் அடி வேரானது பரந்து வளர்ந்து கால்வாயின் ஒரு பகுதியை அடைத்து உள்ளது. அதனால் கால்வாயில் தண்ணீர் வரத்து தடை படும் நிலை உள்ளது. ஏற்கனவே கால்வாய் தூர்வாரா மலும், புதர் மண்டி உள்ள நிலையிலும் கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி தண்ணீர் விடக் கேட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கால் வாயை அடைத்து வளர்ந்துள்ள அரச மரத்தின் வேரா னது தண்ணீர் வரத்தை தடுக்கும் நிலையில் உள்ள தால் இந்த வேர் பகுதியை உடனடியாக வெட்டி அப்புறப் படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு எழுதுவதற்கு கூடுதல் தொகை வாங்கினால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
தஞ்சாவூர், செப்.17- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுப்ப வர்கள் ரூ.20-க்கும் அதிகமாக வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் எச்ச ரிக்கை விடுத்தார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர் நாள் கூட்டம் நடைபெறும். இதில் கோரிக் கைகளை முறையீடு செய்ய வருபவர்கள் மனு எழுதத் தெரியாத நிலையில், ஆட்சிய ரக வளாகத்தில் மனு எழுதிக் கொடுப்ப வர்களிடம் கொடுத்து எழுதி வாங்கிச் செல்வது வழக்கம். இதற்காக எழுதிக் கொடுப் பவர் கட்டணம் பெற்றுக் கொள்வார். இந்நிலையில், பொதுமக்களிடம் மனு எழுதிக் கொடுப்பவர்கள் ரூ.100 கட்டணம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஆட்சியரக வளாகத்தில் திங்கள் கிழமை மனு எழுதிக் கொடுப்பவர்களிடம், மனுவை எழுதி வாங்குவதற்காகக் காத்தி ருந்த பொதுமக்களிடம் எவ்வளவு தொகை கேட்கப்படுகிறது என்பதை கேட்டறிந்தார். அப்போது, மனு எழுதிக் கொடுப்ப வர்களிடம் ஆட்சியர் கூறுகையில், “இங்கு வரும் மக்கள் பெரும்பாலும் ஏழைகளாக உள்ளனர். அவர்களிடம் மனு எழுதுவதற்கு ரூ. 100, ரூ. 200 கட்டணம் வாங்குவதாகப் புகார்கள் வருகின்றன. மனு எழுதுவதற்கு ரூ. 20 மட்டுமே கட்டணமாகப் பெற வேண்டும். அதைவிட கூடுதலாக கட்டணம் பெறுவது தெரிய வந்தால், அவர்களை ஆட்சி யரகத்துக்குள் மனு எழுதிக் கொடுக்க அனு மதிக்க மாட்டோம்” என எச்சரித்தார்.