ராஜபாளையம் , செப். 13 ராஜபாளையம் மேற்கு ஒன்றியம் சேத்தூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செய லாளர் தோழர் சீதாராம் யெச்சூரி மறைவிற்கு மௌன ஊர்வலம் செட்டியார்பட்டி நகர செயலாளர் தோழர் குருநா தன் தலைமையில் நடை பெற்றது. இதில் சேத்தூர் பகுதி யில் உள்ள அனைத்து கட்சி தோ ழர்கள் பங்கெடுத்து கொண்ட னர். இறுதியில் ஒன்றிய செய லாளர் சந்தனகுமார், மாவட்ட குழு உறுப்பினர் ராமர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் குருசாமி இரங்கல் செய்தி யையும் நாட்டிற்கு தோழர் சீதாராம் யெச்சூரி ஆற்றிய பங்கையும் விளக்கிப் பேசி நிறைவு செய்தனர் . ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் இரங்கல் ஊர்வ லம் இரங்கல் கூட்டம் நடை பெற்றது. ஊர்வலம் ராம கிருஷ்ணாபுரத்தில் இருந்து துவங்கி பேருந்து நிலையம் வழியாக வடக்கு ரத வீதியை அடைந்தது. அங்கு நடை பெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே அர்ஜுணன் ,சிபிஐ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி ,முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்
பொன்னு பாண்டியன் உள்ளிட்டோர் இரங்கல் உரை ஆற்றினர். மேலும் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் திருமலை, ஜோதிலட்சுமி, ஒன்றிய செய லாளர் சசிகுமார் மற்றும் சிபிஐ நகரச் செயலாளர் மூர்த்தி, திமுக சார்பில் ராதாகிருஷ் ணன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரியதர்ஷினி ,நகர செயலாளர் மைக்கேல் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ராஜபாளையம்கிழக்கு ஒன்றிய குழு சார்பில் அஞ்சலி ஊர்வலம் அய்யனாபுரத்தில் துவங்கியது. சத்திரப்பட்டி நடுத்தெருவில் அஞ்சலி கூட்டம் சிபிஎம் ஒன்றிய செய லாளர். முனியாண்டி தலை மையில் நடைபெற்றது. விடு தலை சிறுத்தை கட்சி சார்பில் முத்து கந்தன். தேமுதிக சார்பில் பொன்னுசாமி. சிபிஐ சார்பில் ஆர் பி முத்துமாரி, ஆர். சோமசுந்தரம் மற்றும் அனைத்து கட்சி தோழர்கள் ,சிஐடியு லோடுமேன் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். ராஜபாளையம் காந்தி சிலையிலிருந்து துவங்கி ஜவஹர் மைதானத்தில் இரங்கல் ஊர்வலம் நிறைவு பெற்றது. ஜவகர் மைதானத்தில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செய லாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தங்கப் பாண்டியன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம், அதிமுக தெற்கு நகர செயலாளர் பரம சிவம், திராவிடர் கழக தலை மை கழக அமைப்பாளர் திருப்பதி, மதிமுக மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி, காங்கிரஸ் நிர்வாகி டைகர் சம்சுதீன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி இரங்கல் கூட்டத்தை நிறைவு செய்து பேசினார். நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷ்யாம், திமுக தெற்கு நகர செயலாளர் ராமமூர்த்தி, அதிமுக வடக்கு நகர செயலாளர் முருகேசன், மதிமுக நகர செயலாளர் மதியழகன், சிபிஐ நகர செயலாளர் விஜயன், ஐஎன்டி யூசி பிரபாகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கணேசன், நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், முருகானந்தம், மேரி உட்பட அனைத்துக் கட்சி நிர்வா கிகளும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தோழர்களும் திரளாக பங்கேற்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல்
சிக்கல் பேருந்து நிலை யம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கடலாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அம்ஜத் கான் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் தாலுகா குழு உறுப்பினர்கள் ராமசாமி, நம்புராஜன், சக்தி குமார், ஜெயக்குமார், ராமாயி திமுக கவுன்சிலர் அம்மாசி, ஆசிரியர் இளைஞ ரணி செயலாளர் காதர், காங்கிரஸ் முனியசாமி, அம்ஜத் நசீர், அதிமுக ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தாலுகா குழு செயலாளர் பி.செல்வராஜ் தலைமையில் அஞ்சலி கூட்டம் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஆர்.குருவேல், எம்.சிவாஜி, சிஐ டியூ நிர்வாகிகள் அய்யாதுரை, வாசுதேவன், மணிக்கண்ணு, எல்ஐசி டி.முத்துப்பாண்டி, தாலுகாகுழு உறுப்பினர்கள் என்.வெங்கடேஷ், எஸ். பி.பூமிநாதன், பி.கல்யாண சுந்தரம், கே.மாலதி, ஆர்.அழகேந்திரன் மற்றும் அழகு இராமசாமி, புஷ்பராஜ், நாகேந்திரன், இராமசாமி, முனியசாமி, பிஎஸ்எம் குப்புச்சாமி, ஏ.இராமமூர்த்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் அண்ணாரவி ,மின் ஊழியர் மத்திய அமைப்பு கே.ராகுல், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் கே.சுரேஷ் ,நகர் செயலாளர் சுப்பிரமணி, வி.சி.க அமீர் பாய் உட்பட 50க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது.