districts

img

ஏரி, கால்வாய், ஓடைகளை மயிலாடுதுறை ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை டிச.4-  மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம்  மங்கைமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெருந்தோட்டம் ஏரி, எடமணல் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி, வேட்டங்குடி ஊராட்சி வாலிஓடை, நல்லூர் கிராமம் முதலைக்குளம், ஆச்சாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும்  தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட தலைச்சங்காடு கிராமம், தாமரைக்குளம், காந்திநகர் நாகமரத்து  வாய்க்கால் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்  ஏ.பி.மகாபாரதி கள ஆய்வு மேற்கொண்டார். மங்கைமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கு வதற்கு தயார் செய்யப்பட்டிருந்த காலை உண வின் தரத்தினை ஆய்வு செய்து, மாணவர்க ளின் எண்ணிக்கை விபரங்களை கேட்டறிந்தார்.  பெருந்தோட்டம் ஏரியினை பார்வையிட்டு, கரை களின் பலம் மற்றும் நீர் இருப்பு விபரங்களை ஆய்வு செய்தார். எடமணல் ஊராட்சி அரசு உயர் நிலைப் பள்ளி அருகில் வாய்க்கால் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விட்டார். தொடர்ந்து, எடமணல் ஊராட்சி புற வாய்க்கால் கரைகளையும், வேட்டங்குடி ஊராட்சி  வாலிஓடை கரைகளையும் ஆய்வு செய்தார்,  நல்லூர் கிராமத்தில் முதலைக்குளத்தை ஆய்வு செய்து, குளத்திற்கான நீரோட்ட வாய்க்கால் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து ஆச்சாள்புரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட  மாவட்ட ஆட்சியர், 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். அப்பள்ளியில், மாணவ, மாணவி யர்களுக்கு வழங்குவதற்கு தயார் செய்யப் பட்டுள்ள மதிய உணவின் தரத்தினையும், மதிய உணவு திட்டத்தின்கீழ் முட்டை வழங்கு வதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள முட்டை களின் தரத்தினையும் ஆய்வு செய்தார்.  தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட தலைச் சங்காடு கிராமத்தில் உள்ள தாமரைகுளத் தில், ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ள தையும், காந்திநகர் நாகமரத்து வாய்க்கால் முகத்துவாரத்தில் மழைநீர் விரைந்து செல்வ தற்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளதையும் பார்வை யிட்டு, அப்பகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.