தமுஎகச பொன்விழா ஆண்டு தகவல் பலகை திறப்பு நிகழ்ச்சி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிளைத் தலைவர் கே.வி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. நகர கிளை அலுவலகம் முன்பு தகவல் பலகையை மாவட்ட துணைச் செயலாளர் கே.பிச்சைக்கண்ணு திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் பேசினர். கிளைச் செயலாளர் தியாக சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.