புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கட்டுமாவடி வழியாக அறந்தாங்கிக்கு புதிய பேருந்து வழித்தடத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் சீனியார், கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர் அலி, காங்கிரஸ், திமுக கட்சி நிர்வாகிகள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.